பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”

பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை.. நான் ஒரு “”PHONY” என்று புலம்வார்..

 FALCON SECURITY AGENCY பெரு நகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையில் 2017-18ல் மருந்தாளுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட்டு, பணி வழங்கப்பட்டது. ஒரு வருட பணியில் மூன்று மாதம் ஊதியத்தை FALCON SECURITY AGENCY கொடுக்கவில்லை. போராட்டத்துக்கு பின் இரண்டு மாதம் ஊதியம் கொடுத்தது. இன்னும் ஒரு மாதம் ஊதியம் வழங்கவில்லை. பணிக்கு வந்த ஊழியர்களிடம் PF,ESI கொடுக்கவில்லை. PF அலுவலகத்தில் பணமே செலுத்தவில்லை. PF ஆணையரிடமும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் FALCON SECURITY AGENCY நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்கள்..

 இதனால் FALCON SECURITY AGENCY நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்து, ஒப்பந்த பணிகள் கொடுக்க கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்யிடம் மனு கொடுத்துள்ளார்கள்.. தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம் தான் பாதிக்கப்பட்ட மருந்தாளுநர் ஊழியர்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறது.

 ஆனால் FALCON SECURITY AGENCY நிறுவனத்துக்கு பெரு நகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் SECURITY பணி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ஒப்பந்த பணிகளை கொடுக்க ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்..

 மருந்தாளுராக பணிபுரிந்த ஊழியர்களுக்கு இன்னும் ஒரு மாத சம்பளம் பாக்கி உள்ளது, PF,ESI கொடுக்காத FALCON SECURITY AGENCY மீண்டும் ஒப்பந்த பணி கொடுத்துள்ளது, ஊழல் தானே….

 இப்படி பெரு நகர சென்னை மாநகராட்சியில் தினமும் பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது.. அதனால் பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் மினி தொடராக  வெளி வரும்..

 

Comments

comments