பெரம்பலூர் தொகுதி…பச்சமுத்துவிடம் விலை போன திமுக..உதயசூரியனில் போட்டியிட அருகதை இல்லை

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கல்வி மாபியா பச்சமுத்து உடையார் போட்டியிடுகிறார். சென்னை ராமாவரத்தில் ரூ250 கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை ஆக்ரமித்துள்ள கல்வி மாபியா பச்சமுத்து, திமுக கூட்டணியில் மட்டுமல்ல, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்..

  பச்சமுத்துவுக்கு திமுகவுக்கு என்ன சம்பந்தம்.. பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அருகதையே இல்லை. பச்சமுத்துவின் பணத்துக்கு திமுக விலை போய்விட்டதாக திமுகவின் தொண்டர்கள் புலம்புகிறார்கள். தொண்டர்களின் குரல் திமுக தலைமைக்கு கேட்கவே இல்லை.

  பச்சமுத்து ஆக்ரமித்த அரசு நிலத்தை  சென்னை உயர்நீதிமன்றம் கையகப்படுத்த, உத்தரவிட்டு, அதிமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்..

 கல்வி மாபியா, நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்துவின் பணத்துக்கு திமுக விலை போய்விட்டதா?

 பாஜக கூட்டணியில்  பெரம்பலூர் தொகுதியில் பச்சமுத்து 2014ல் போட்டியிடும் போது, திமுக தலைவர் ஸ்டாலினைப்பற்றி பேசிய வீடியோ பாருங்கள்.. மிசாவில் ஜெயிலர் வித்யாசாகர், ஸ்டாலினை அடித்து, கையை உடைத்தது சரிதான் என்று பேசியுள்ளார்.

 திருச்சி, பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட திமுகவில் வேட்பாளரே இல்லை என்பதுதான் உண்மை. திருச்சி மாவட்ட திமுகவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    இலால்குடி தொகுதியில் புள்ளம்பாடி ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திமுக, அதிமுகவை விட பலமாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக ராஜசேகரனுக்கு, இலால்குடி ஒன்றியத்தில் உறவினர்கள் அதிகம்..

 திமுக தலைவர் கலைஞர் முதன் முதலில் போட்டியிட்ட குளித்தலை தொகுதி, பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ளது. கலைஞரின் குளித்தலை தொகுதியில் கல்வி மாபியா, அரசு நில ஆக்ரமிப்பாளர் பச்சமுத்துவுக்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்பது, மிகவும் வேதனையாக உள்ளது..

 பச்சமுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கம் என்பதால், அதிமுக வேட்பாளர் சிவபதியை, கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டாம். பச்சமுத்துவுக்கு ஆதரவு கொடுக்கும் படி கூறியுள்ளார்.

  மக்கள்செய்திமையம், கல்வி மாபியா பச்சமுத்துவின் அரசு நில ஆக்ரமிப்பை ஆதாரங்களுடன் 4பக்கத்தில் நோட்டீஸாக பெரம்பலூர் தொகுதி முழுவதும் கொடுக்க முடிவு செய்துள்ளது..

                       

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

நாராயணபுரம் ஏரி பராமரிப்பு ஊழல்-துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு..

சென்னை அருகே உள்ள பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட நாராயணம்புரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில், ஒரு ரூபாய்க்கு கூட …

Leave a Reply

Your email address will not be published.