பூந்தமல்லி நகராட்சி- நவீன டிஜிட்டல் கழிப்பறை-1000 கொசு வாங்கினால் 1000 கொசு இலவசம்.. இரா.டிட்டோவுக்கு நன்றி

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த  தூய்மை இந்தியா திட்டத்தில் , நவீன டிஜிட்டல் கழிப்பறையின் அவலமான நிலையைதான்.. 5.12.18ம் தேதி மதியம்  12.55க்கு எடுக்கப்பட்ட போட்டோ.. இப்படிப்பட்ட நவீன டிஜிட்டல் கழிப்பறையை நகராட்சி அலுவலகத்தில்  பராமரிக்கும் ஆணையர் இரா.டிட்டோவுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

  நகராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையே டெங்கு கொசு பண்ணையாக  செயல்படும் போது, மக்கள் வசிக்கும் பகுதிகளை நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.நூற்றுக்கணக்கான கொசுப்பண்ணையில் செயல்படுகிறது.  பூந்தமல்லி நகராட்சியில் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டெங்கு கொசு பண்ணை மூலம் டெங்கு கொசு விற்கப்படும் என்று விளம்பரம் செய்யவில்லை…விரைவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டெங்கு கொசு, பன்றி காய்ச்சல் கொசு விற்பனை செய்யப்படும்.. 1000 கொசு வாங்கினால்.. 1000 கொசு இலவசம்..

      டெங்கு கொசு விழிப்புணர்வு என்ற பெயரில் தனியார் நிறுவனத்துக்கு  பல லட்சம் மாதா, மாதம் ரூ11.56 இலட்சம் முதல் ரூ13.13 இலட்சத்து வரை  போடப்படும் பில் போலிதானோ..

 கார்த்தியா எண்டர்பிரைசஸ் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர் பல லட்சத்துக்கு சப்ளை..ஸ்ரீகாமாட்சி  அம்மன் ஏஜென்சி கொசு மருந்து இயந்திரம் சப்ளை.. இதெல்லாம் டெங்கு கொசு பண்ணையை.. மற்ற கொசுக்களை அழிக்காமல் இருக்கவா…

 நகராட்சி ஆணையர் டிட்டோ அவர்களுக்கும், சுகாதாரபிரிவு ஆய்வாளருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..

 

Comments

comments