பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி..அதிமுகவில் கோஷ்டி மோதல்..முன்னேறும் அமமுக- திணறும் திமுக

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஏழுமலை மீண்டும் போட்டியிடுகிறார்.

 எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறனுக்கு எதிராக சம்பத் வாத்தியார் களம் இறங்கியுள்ளார். மணிமாறன் அணியும்,  சம்பத் வாத்தியார் அணியும் தொகுதி முழுவதும் எங்கள் தலைவருக்குதான் சீட் என்று தங்கள் அணிக்கு ஆதரவாளர்களை சேர்த்து வருகிறார். இதனால் அங்குங்கு சின்ன மோதல்கள் நடக்கிறது.

 பூந்தமல்லி  நகராட்சி ஆணையராக இருந்த  சுரேந்திரஷா, அப்போது எம்.எல்.ஏவாக இருந்த மணிமாறன் அய்யாவுக்கு, அம்மா லாஜிஸ்டிக் என்ற பெயர் உள்ளிட்ட பல போலி பெயர்களில்  குப்பை அள்ள, பொக்லைன், லாரிகளை பயன்படுத்தியதாக ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ10 இலட்சம் வரை போலி பில் போட்டு கொடுத்து வந்தார்(இதற்கான ஆதாரம் மக்கள்செய்திமையத்திடம் இருக்கிறது).

 2016ல் சட்டமன்றத் தேர்தலில் மணிமாறனுக்கு பதிலாக ஏழுமலை வேட்பாளராக அறிவிக்கும் வரை போலி பில் விவகாரம் தொடர்ந்தது. பூந்தமல்லி நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன் மாறுதல் விவகாரத்தில்,  பூந்தமல்லி நகர அதிமுகவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போலி பில் ஊழலால் தற்போது பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டது.

 திமுக வேட்பாளராக மீண்டும் வழக்கறிஞர் பரந்தாமனை அறிவித்தால், திமுக தோல்வி உறுதியாகிவிடும். பூந்தமல்லி நகரத்திலேயே திமுக இரு கோஷ்டிகளாக செயல்படுகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் இரண்டு கோஷ்டிகளில் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது. பூந்தமல்லி தொகுதி முழுவதுமே திமுகவின் செயல்பாடுகள் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் இல்லை.

  அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தில், முன்னாள் மதிமுக கவுன்சிலர் கந்தனை சேர்த்து, பதவி கொடுத்த காரணத்தால், பூந்தமல்லி நகரத்தில் அமமுகவினர் அதிருப்தியில் உள்ளார். இதையெல்லாம் சரி செய்ய, அமமுக எம்.எல்.ஏ வேட்பாளர் எழுமலை முயற்சி செய்யவில்லை.

 அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தில், சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை மீறி  ஏழுமலைக்காக பணியாற்ற  இளைஞர் பட்டாளமே களத்தில் இறங்கியுள்ளது..

 திமுகவில் பரந்தாமனுக்கு பதில் வேறு ஒருவரை  வேட்பாளராக அறிவித்தால், பூந்தமல்லி தொகுதியில் திமுகவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இடையே போட்டியாக இருக்கும்..

  மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன், அடுத்த தொகுதி நிலவரம், தொகுதி சர்வே விரிவாக வெளியிடப்படும்..

                     

                    

                   

 

Comments

comments