பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி…உதயசூரியன் vs குக்கர் VS இரட்டை இலை

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை, டி.டி.வி தினகரன் அணியில் இருந்தால் காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டி.டி.வி தினகரன்  ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு இதுவரை செய்யவில்லை.

 பூந்தமல்லி தொகுதியை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலை களத்தில் உள்ளார்.

 திமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமியா..திருமதி காயத்ரி ஸ்ரீதரா என்று திமுக தலைமை முடிவு செய்யவில்லை.

 பூந்தமல்லி தொகுதியில் ரிசர்வ் தொகுதியாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களைவிட மற்ற சமூக மக்களே அதிகமாக உள்ளார்கள். எடப்பாடி தலைமையிலான அதிமுக வேட்பாளர் மணிமாறன் 2011-16ல் எம்.எல்.ஏயாக இருந்த போது, தொகுதி மக்களை கவனிக்காமல், பார் டெண்டர் எடுப்பது, அம்மா பொக்லைன் பெயரில்  குப்பைகளை அகற்றுவதாக நகராட்சிகளில் பல லட்சம் போலி பில் போட்டது, இப்படி பல குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்.

  2016 சட்டமன்றத் தேர்தலில் மணிமாறனுக்கு சீட் தராமல் ஏழுமலைக்கு சீட் கொடுத்து நிறுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஏழுமலையை எதிர்த்து, திமுகவில் வழக்கறிஞர் பரந்தாமன் நிற்காமல் கிருஷ்ணசாமி, காயத்ரி ஸ்ரீதர் நிறுத்தப்பட்டு இருந்தால், இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருக்கும்.

எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் பூந்தமல்லி தொகுதி முழுவதும் கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கிறது. மணிமாறனை தோற்கடிக்க அதிமுகவினர் பலர் இப்போதே ஆலோசனை செய்து வருகிறார்கள்.

 பூந்தமல்லி தொகுதியில் இடைத்தேர்தலில் திமுகவில் முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமி போட்டியிட்டால், ஏழுமலை வெற்றிக்கு போராட வேண்டியிருக்கும். ஆனாலும் ஏழுமலை வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம்..

 திமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமி போட்டியிடாமல் வேறு நபருக்கு சீட் கொடுத்தால், அமுமக வேட்பாளர் எழுமலை வெற்றி பெற்றுவிடுவார். இரண்டாவது இடத்தில் இரட்டை இலை வந்துவிடும்.. உதயசூரியன் மூன்றாவது இடத்துக்கு போய்விடும். இதுதான் தற்போதைய நிலை…

 மக்கள்செய்திமையம் அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் பூந்தமல்லி தொகுதி முழுவதும் கொண்டு செல்லும் பணியை தொடங்கிவிட்டது..

 65000 வாக்காளர்களின் செல்போன் வாட்ச் அப் மூலம் அதிமுக அரசின் ஊழல்களை அனுப்ப மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது..

 

 

 

 

 

 

Comments

comments