பூந்தமல்லியில் தேசிய புலானய்வுப்பிரிவு முடங்கி போன உளவுப்பிரிவு… GOLDEN HOMES அப்ரூவல் ஊழலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

தமிழக காவல்துறையின் கீழ் செயல்படும் உளவுப்பிரிவு முடங்கி போய்விட்டது. உளவுப்பிரிவு ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு துதிபாடும் பணியை மட்டுமே செய்கிறது. தீவிரவாதிகள், கூலிப்படையினர் நடமாட்டம் தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை..

 இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய தீவிரவாதியானஜஹ்ரன் ஹாசிம், ஹசன் இருவருக்கும் தமிழகத்தில் தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலானய்வுப்பிரிவு விசாரணை செய்து வருகிறது. பூந்தமல்லி உள்ள கோல்டன் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வது மாடியில் குடியிருக்கு இலங்கையை சேர்ந்த மூவரிடம் விசாரணை நடந்தது. துனுகா ரோஷன் என்ற இலங்கையை சேர்ந்தவர் சுதர்சன் பெயரில் தங்கி இருந்ததை கண்டுபிடித்தார்கள். கைது செய்யப்பட்டாரா என்ற விவரம் தெரியவில்லை..

 பூந்தமல்லியில் கோல்டன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளது. கோல்டன் ஹோம்ஸ் 815 வீடுகள் கொண்ட  அடுக்குமாடி குடியிருப்புக்கு, சி.எம்.டி.ஏ(64/2012) அனுமதி கொடுத்தது. மூன்றாண்டுகளுக்கு கட்டி முடிக்க வேண்டும். மூன்றாண்டுகள் காலக்கெடு முடிந்த பிறகும் எந்த வித அனுமதியும் இல்லாமல் பணி நீட்டிப்பு பெறாமல், கட்டுமான பணியை கோல்டன் ஹோம்ஸ் நிறுவனம் தொடர்ந்தது.  பூந்தமல்லி நகராட்சி ஆணையராக  சுரேந்திரஷா, பூந்தமல்லி நகரமைப்பு ஆய்வாளராக இருந்த நாகராஜன்  சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநராக இருந்து, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள செபாஸ்டின்  நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள சில உயரதிகாரிகள் இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி இல்லாமல் தொடரும் கட்டுமான பணியை கண்டுகொள்ளவில்லை. (நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பினாமி பெயரில் கோல்டன் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் மலிவு விலையில் கொடுக்கப்பட்டுள்ளதா தெரிகிறது) இதனால் பூந்தமல்லி நகராட்சிக்கு ரூ76 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 மக்கள்செய்திமையம் 10.8.2016ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு கோல்டன் ஹோம்ஸ் விவகாரம் தொடர்பாக புகார் மனு அனுப்பியது. அந்த புகார் மனு குப்பைக் கூடைக்கு போனது.

 கோல்டன் கோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களுக்கு, சொத்து வரிக்கூட விதிக்கப்படவில்லை..

 2017 பிப்ரவரியில் தமிழக அரசின் உள்துறை செயலாளர், டிஜிபிக்கு பூந்தமல்லி கோல்டன் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் கூலிப்படை கும்பலுடன் தொடர்புடையவர்கள் குடியிருப்பதாக புகார் அனுப்பியது. அந்த புகாருக்கு குப்பைக்கு கூடைக்கு சென்றது.

ஏற்கனவே மலையம்ப்பாக்கத்தில் ரவுடிக்கு பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள்..மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் மீது 19.12.18ம் தேதி மாலை 6.10க்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள்..மயிரிழையில் உயிர் தப்பித்தார்..இது வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை…

  பூந்தமல்லி மற்றும் காட்டுப்பாக்கத்தில் கட்டப்பட்ட இருக்கும் 20க்கு மேற்பட்ட  பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள், கூலிப்படை கும்பல் தங்கி இருப்பது உறுதியாக தெரிகிறது…

Comments

comments