புதுக்கோட்டை மாவட்டம்….சட்ட விரோத மணல் கொள்ளை… குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்…

  புதுக்கோட்டை மாவட்டம் மதுரை நெஞ்சாலையில் வெள்ளாற்றிலும், அரிமளம் சாலை கடையக்குடி, அன்னவாசல், கறம்பக்குடி, வல்லத்திரகோட்டை, குமரமலை முருகன் கோயில் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள  ஆற்று படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. ஜே.சி.பி மூலம் 15 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி மணல் சட்டவிரோதமாக அள்ளுவதால், நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

 ஏரிகள், குளங்கள், கோயில் குளங்களிலும் களி மண் எடுத்து, ஆழப்படுத்துவதாக கூறி,500, 1000 லோடுகளுக்கு புவியியல் சுரங்கத்துறையில் அனுமதி பெற்றுவிட்டு  பல ஆயிரம் லோடுகள் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு வருகிறது.

 மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் ஐ.ஏ.எஸ், எதையும் கண்டுகொள்ளுவது இல்லை.  அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே காத்துகிடக்கிறார்…புவியியல் மற்றும் சுரங்கத்துறை  உதவி இயக்குநர்  பன்னீர்செல்வம் நான் தாண்டா தொழில் துறை அமைச்சர்..நான் தாண்டா…புவியியல் சுரங்கத்தை இயக்குநர் என்று வெளிப்படையாக பேசி வருகிறார்…

  சட்ட விரோத மணல், இயற்கை கனிம கொள்ளையர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியர் செல்வி சரயு தற்போது அமைதியாகிவிட்டார்..

 இதே நிலை நீட்டித்தால் புதுக்கோட்டை மாவட்டம், தமிழக வரைப்படத்திலிருந்து காணமால் போய்விடும்..

  மாவட்ட நிர்வாக குறட்டை விடுவதால் சட்ட விரோத இயற்கை கனிம கொள்ளையர்கள் பிடியில் புதுக்கோட்டை மாவட்டம்  சிக்கி தவிக்கிறது

Comments

comments