புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

புதுக்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் TNUIFSL  நிறுவனம் மூலம் குளங்களை மேம்படுத்த KWF உதவியுடன் Sustainable Municipal infrastructure Finance in Tamil nadu Phase-II Part-1 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ14.90கோடி, இரண்டு வருடமாகியும் மேம்படுத்தாமல், அந்த பணத்தில் தன் மகள் சடங்குவிழாவை 4.2.18ல் காரைக்குடியில் அம்பானி குடும்ப விழா பாணியில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினார்.

 சுப்ரமணியன் மாமனார் அதிமுக அவைத்தலைவர் காளிதாஸ் என்பதால், விதிமுறைகளை குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டு, மகள் சடங்கு விழாவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பாஸ்கர், வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் ஐ.ஏ.எஸ், செந்தில்நாதன் எம்.பி ஆகியோர்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் பெயரில் அனுமதி பெறாமல்,விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர், கட் அவுட்  வைக்கப்பட்டு இருந்தது.

  அரசு அதிகாரிகள் என்றால் அனுமதி  பெறாமல் விளம்பர போர்டுகள் வைக்கலாமா? சிவகங்கை மாவட்ட நிர்வாகம் குறட்டை விடுகிறதா?

  நகராட்சி பொறுப்பு ஆணையர், தன் பெயரில் அமைச்சர்களுக்கு பிளக்ஸ் போர்டு வைக்கலாமா? அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதி 1960 & 1973யை மீறிய பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

 

Comments

comments