புதுக்கோட்டை..தேர்தல் விதிமுறைகளை மதிக்காத-மாவட்ட நிர்வாகம் & அமைச்சர் விஜயபாஸ்கர்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டம் நிர்வாகம் கேட்கிறது. தேர்தல் விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கிறது மாவட்ட நிர்வாகம்..

 29.3.19 இரவு 7மணி முதல் விடிய, விடிய அதாவது 30.3.19 காலை வரை  புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட தலைமை மின்சாரவாரியம் முதல் அண்ணாசாலை வழியாக ஆலங்குடி செல்லும் சாலையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டி.வி.எஸ் கார்னர் வரை சாலையின் இருபுறமும் முறையாக செப்பனிடாமல் அவசரம், அவசரமாக தார் சாலை போடும் பணி நடந்தது.

 தேர்தல் விதிமுறைகளை மீறி தார் சாலை போடுவதை எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் போன் மூலம் புகார் செய்தார்கள்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு இல்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள்..

  27.7.18ல் கிண்டியுள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் அறை எண்.4603ல் நடந்தது என்ன என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளிப்பாரா..

                      

 

 

Comments

comments