புதுக்கோட்டை..அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் விக்கி கைது..

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்து சிக்கியுள்ளார். மேலும் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த டாக்டர்களின் உறவினர்கள் பெயரில் பல கோடி சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்த விவகாரத்தை அமுலாக்கப்பிரிவு விசாரணை செய்து வருகிறது.

 இந் நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கும் போது, அவருடன் 24மணி நேரமும் நிழல் அமைச்சராக வலம் வரும் உதவியாளர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்தின் கையெழுத்தை போலியாக போட்டு, மருந்தாளுநர் நியமன பணி உத்தரவை கொடுத்துள்ளார்.

 போலி உத்தரவு மூலம் பணியில் சேர வந்த கார்த்திகேயன் மற்றும் பிரபாகரன், விக்னேஷ்வரன் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற எண்.05/2019 –  420,465,468,471, 120(b) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..

 அமைச்சர் விஜயபாஸ்கர், என்னை சுற்றி பல பேர் சுற்றி வருகிறார்கள்.. அவர்கள் செய்யும் தப்புக்கு எனக்கு என்ன சம்பந்தம் என்று அலட்சியமாக பதில் சொல்லுகிறார்…

 அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் விக்னேஷ்வரன் கைது செய்யப்படுவாரா?

        

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

மத்திய சென்னை தொகுதி..உழைப்பால் உயர்ந்த சாம் பால்- பணத்தால் உயர்ந்த தயாநிதி மாறன்.. மினி சர்வே…

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சாம் பால் மக்களோடு, மக்களாக பழகியவர். …

Leave a Reply

Your email address will not be published.