புதிய தலைமைச் செயலகம் கட்டிட ஊழல்…மக்கள்செய்திமையம் புகார் அளித்தும்- விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்யவில்லை ஏன்?-அமைச்சர் ஜெயக்குமார் பதில் சொல்லுவாரா?

அதிமுக அரசில் முட்டை கொள்முதல் ஊழல், நெஞ்சாலைத்துறை ஊழல், குட்கா மாமூல விவகாரம் என்று தினமும் ஒரு ஊழல் வெளி வந்துக்கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையும் தொடர்ந்து ரெய்டு நடத்தி கொண்டு இருக்கிறது..

 இந்த ஊழலுக்கு சரியாக பதில் சொல்லாத அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலகம் ஊழலைப்பற்றி பேசியுள்ளார்.

    புதிய தலைமைச் செயலகம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி செலவில் கட்டப்பட்டது, இதற்கு சரியான முறையில் திட்டமதிப்பீடு போடாமல் 3 முறை திட்ட மதிப்பீட்டில் திருத்தம் செய்து பல கோடி ரூபாய் உயர்த்தி கொடுத்ததன் மர்மம் என்ன?. அதேபோன்று அப்போது துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்து கருணாநிதி தன்னிடம் வைத்துக்கொண்டார்.

  ஏனென்றால் ஊழல் பணம் அனைத்தும் தனது குடும்பத்திற்கே வர வேண்டும் என்பதால் தான். தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தவர் ராமசுந்தரம். 6 வருடம் பணியில் இருக்க வேண்டிய அவர் அவசர அவசரமாக ஓட வேண்டிய அவசியம் என்ன? இதற்கெல்லாம் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்..

 மக்கள்செய்திமையம் கேள்விக்கு அதிமுக அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் பதில் சொல்லுவாரா?

  1. 2011 மே மாதம் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அமைச்சரவை அமைந்தவுடன், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமான பணியில் நடந்த ஊழல் தொடர்பாக விஜிலென்ஸ் துறையில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.
  2. தலைமைச் செயலகம் கட்டுமான பணிகளை கவனித்த பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் 2.11.10ல் விருப்ப ஒய்வில் செல்ல கடிதம் கொடுத்தார். தலைமைச் செயலக கட்டுமான பணி முடிந்தவுடன் 1.2.11ல் விருப்ப ஒய்வில் செல்ல அனுமதிக்கலாம் என்று பொதுத்துறை அதிகாரிகள் கோப்பில் எழுதினார்கள். ஆனால் கோப்பில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி 25.11.10 கையெழுத்து போடும் போது,30.11.10 விடுவிக்கலாம் என்று எழுதினார். 2011 மே மாதம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
  3. தலைமைச் செயலகம் கட்டுமான பணியில் முறைகேடு நடப்பதாக தகவல் வர, தலைமைச் செயலகம் கட்டுமான பணியின் கண்காணிப்பு பொறியாளர் அன்பழகனை மாற்றப்பட்டார் இது தொடர்பான அதிமுக ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
  4. தலைமைச் செயலகத்தின் கட்டுமான பணியின் தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணனுக்கு அதிமுக ஆட்சியில் பதவி நீட்டிப்பு கொடுத்து, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கோபாலகிருஷ்ணன் மூலம் தலைமைச் செயலகத்தின் கட்டுமான ஊழல் கோப்புகளை அழித்த மர்மம் என்ன?
  5. 2011-12ல் மக்கள்செய்திமையம் தலைமைச் செயலகத்தின் கட்டுமான பணியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக விஜிலென்ஸ் துறைக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…

புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமான பணியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக 4000 பக்கங்கள் கொண்ட ஊழல் ஆவணத்தை மக்கள்செய்திமையம் தயாராக உள்ளது… விஜிலென்ஸ் துறை மூலம் வழக்கு பதிவு செய்ய தயாரா….

 

 

Comments

comments