பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில்-தீபாவளி வசூல் மேளா.. குறட்டை விடும் விஜிலென்ஸ்…

நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உத்தரவின்படி 1.11.18ம் தேதி காலை 10மணிக்கு எழிலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகத்தில்  CITY engineers & REE ரெவியூ கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் தீபாவளி வசூல் மேளா கூட்டமாம்..

  1. Automatic water vending centre
  2. FSTM – status of submission of DPR &TS
  3. UGGS – internal plumbing works
  4. DMA zonation in water supply sustem
  5. SWM status..

  இதைப்பற்றி ஆய்வு செய்வதாக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்தும் ஊழல் திட்டம். ஊழல் திட்டத்தைப்பற்றி ஆய்வு செய்தால், ஊழல்தான் நடக்கும்..

 நம்மிடம் பேசிய செங்கல்பட்டு மண்டல REE தரப்பில்  எல்லாம் வசூலுக்காகதான் இந்த கூட்டம் நடக்கிறது ..ஒவ்வொரு CITY engineers & REE தீபாவளி மாமூல் எவ்வளவு என்று செல்போன் வாட் அப் காலில் சொல்லிவிட்டார்கள் என்று புலம்பினார்..

 CITY engineers சிலர் நம்மிடம், போலி பில் போட்டு, தீபாவளி மாமூல் கொண்டு செல்கிறோம் என்று முணு, முணுத்தார்கள்.

 ஆவடி நகராட்சி ஆணையர்  நிருபர்களுக்கு தீபாவளிக்கு மாமூல் கொடுக்க, ரூ.1.25 இலட்சம் செலவாகும் என்று தனியாக வசூல் செய்கிறாராம்..

  தீபாவளி பெயரில் நகராட்சிகள் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் மெகா வசூல் மேளா நடக்கிறது..

                   ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை குறட்டைவிடுகிறதா….

 

                                

 

 

Comments

comments