பாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..

தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள், விசாரணை கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவை மனிதன் மட்டுமல்ல காக்கைகள் கூட உண்ணாது..சிறைச்சாலைகளில் உள்ள  வார்டன்கள் கைதிகளை அடிமை போல நடத்துவதை பார்க்கும் போது, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று கேள்வி கேட்டுவிடாதீர்கள் அரை நிர்வணமாக தொங்கவிட்டு அடிப்பார்கள்..

 நெல்லை பாளையங்கோட்டை கொக்கரக்குளத்தில் பெண்கள் மத்திய சிறையில் தலைமை வார்டன் கங்காதேவி மற்றும் இரண்டாம் நிலை வார்டன் ரேவதி இருவரும் 6.5.19ல் சிறைச்சாலையில் தலைமை வார்டன் அறையில் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்..

  சிறைச்சாலைகளில் செல்போன் அனுமதியில்லை. ஆனால் பிறந்தநாள் விழாவை செல்போன் பதிவு செய்து, மற்ற சிறைச்சாலைகளில் உள்ள வார்டன்களுக்கு அனுப்பி உள்ளார்கள்..

 சிறைச்சாலையில் செல்போன் பதிவு செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு உள்ளோம்.. சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பார்ப்போம்..

Comments

comments