பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக- சோபியா கைது..       

          சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பெற்றோர்களுடன் வந்த லூயிஸ் சோபியா தூத்துக்குடியில் விமானத்தில் இருந்து இறங்கும் போது விமானத்தில் பயணம் செய்த பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் அவர்களிடம் ஸ்டெர்லைட்  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசிய சோபியா, பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டார்.  விமான நிலையத்தில் வரவேற்க காத்திருந்த பாஜகவினரிடம் சோபியா பற்றி கூறினார். அங்கிருந்த காவல் துறை அதிகாரியிடம் புகார் செய்தார்..

      பாஜகவினர் சோபியா கண்டபடி திட்டி தாக்க முயற்சி செய்தார்கள்..காவல் துறை அதிகாரிகள் சோபியாவிடம் மன்னிப்பு கேளுங்கள் பிரச்சனை  இத்துடன் முடித்துவிடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். சோபியா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.. செல்போனில்  தமிழிசை செளந்தராஜனிடம், மனவு புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்..அல்லது ஒரு வார்த்தை சாரி என்று கேட்டால் போது என்றார்கள்..சோபியா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்..

   புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிபதி வீட்டிற்கு  அழைத்து செல்லப்பட்டார்.   நீதிபதி முன் ஆஜர் செய்யும் முன்பு மறுபடியும் மன்னிப்பு கேளுங்கள் வழக்கை முடித்து விடலாம் என்று காவல் துறை அதிகாரிகள் பஞ்சாயத்தை ஏற்க மறுத்து விட்டார் . வயிற்றுவலி துடித்த சோபியாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.. இரவு 11.30மணி வரை சிகிச்சை தொடர்ந்தது.. பிறகு அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் சோபியா..

    பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டதால் கைது என்பதை  ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது…

Comments

comments