பல்லவபுரம் நகராட்சி- நீர் வளத்துறை கூட்டணியின்-ஏரிகள் பராமரிப்பு ஊழல்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை எண்,.1/2.1.15ல் உலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் கடன் வாங்கி,ரூ2212.89 கோடியில் சில திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது..

  சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டது. அந்த அரசாணையில் Restoration of Narayanapuram lake in corporation of Chennai அதாவது நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ரூ15.67 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணிக்கான எம்.புத்தகம் நகல் சென்னை மாநகராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்ட போது, நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணியை சென்னை மாநகராட்சி மேற்க்கொள்ளவில்லை. பல்லவபுரம் நகராட்சியை சேர்ந்தது என்று பதில் அளித்தார்கள்..

 பல்லவபுரம் நகராட்சி நாராயணபுரம் ஏரிக்கு எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று  சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பினார்கள்..

 சென்னை மாநகராட்சி நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை மேற்க்கொண்டு வருகிறது என்று துணை தலைமை பொறியாளர் நீர் வள ஆதாரத்துறை கடிதம் அனுப்பியது..

 நீர் வளத்துறையின் துணை தலைமைப் பொறியாளர், இந்த பணியை கீழ்பாலாறு வடி நில கோட்டம் காஞ்சிபுரம் கவனித்து வருகிறது என்று 28.4.18 & 3.5.18  ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பினார்கள்..

 கீழ்பாலாறு வடி நில கோட்டத்தில் செயற்பொறியாளர் 80 நாட்களாகியும், இது வரை எம்.புத்தகம் நகல் அனுப்பவில்லை.. நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணி நடந்திருந்தால்தானே எம்.புத்தகம் நகல் அளிக்க முடியும்.

 பல்லவபுரம் நகராட்சியின் கீழ் வரும் நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணி நாங்கள் செய்யவில்லை என்று பல்லவபுரம் நகராட்சி பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி பராமரிப்பு பணிகளை எப்படி மேற்க்கொள்கிறது..

 2.1.15ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி பராமரிப்பு பணிகளை 17.4.18ல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தகவல் அளிப்பது வேடிக்கையாக உள்ளது..

ரூ22.01இலட்சம் ஒதுக்கீடு செய்து பெரிய ஏரி, கீழ்க்கட்டளை பராமரிப்பு பணி செய்ய, பல்லவபுரம் நகராட்சிக்கு 39மாதங்களாகிறது..

 உண்மையில் பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி பராமரிப்பு பணி நடக்கவில்லை. போலி எம்.புத்தகம் தயாரிக்க தாமதமாகிறது என்பதுதான் உண்மை…

 வழக்கம் போல் விஜிலென்ஸ் துறைக்கு புகார் கொடுத்துள்ளோம் நடவடிக்கை எடுக்குப்படுமா என்று பார்ப்போம்…

 

Comments

comments