பல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..

உலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் அதாவது ரூ2212.89 கோடி கடன் வாங்கி பல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்கள்.. சென்னை மாநகராட்சி கணக்கில் நாராயணபுரம் ஏரி புனரமைப்புக்கு ரூ15.67கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 நாராயணபுரம் ஏரி புனரமைப்பு தொடர்பான எம்.புத்தகத்தின் நகல் கேட்டோம்.. சென்னை மாநகராட்சி  நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி, பல்லவபுரம் நகராட்சிக்கு உட்பட்டது, அதனால் பல்லவபுரம் நகராட்சியில் தகவல் பெற்றுக்கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பினார்கள்..

 பல்லவபுரம் நகராட்சி எங்களுக்கும், நாராயணபுரம் ஏரிக்கு சம்பந்தம் இல்லை. சென்னை மாநகராட்சிதான் பணியை மேற்க்கொள்கிறது என்று கடிதம் அனுப்பினார்கள்..

 சென்னை மாநகராட்சி நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணிபொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை சேர்ந்தது. அதனால் தகவல் நீர் வள ஆதாரத்துறையிடம் பெற்றுக்கொள்ளவும் என்று கடிதம் அனுப்பினார்கள்..

 பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை  நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி கீழ் பாலாறு வடி நிலகோட்டம் காஞ்சிபுரம் மேற்க்கொண்டார்கள்.. கீழ் பாலாறு வடி நில கோட்டம் செயற்பொறியாளர் எம்.புத்தகம் நகல் அனுப்புவார் என்றார்கள்..

 நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி தொடர்பான விவரங்கள் 7 மாதங்களாகியும் நமக்கு கிடைக்கவில்லை.

  நம்மிடம் பேசிய அதிகாரி, நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி செய்யவில்லை. போலி எம்.புத்தகம் தயார் செய்து, ரூ15.67 கோடி 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய கொடுக்கப்பட்டுவிட்டது என்று புலம்பினார்..

 அரசு ஆணை எண்.1/2.1.15ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில் நாராயணபுரம் ஏரியை புனரமைக்காமல் போலி எம்.புத்தகம் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.. இப்படி பல ஏரிகள் புனரமைப்பு செய்யாமல் ரூ100கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.. ஆதாரங்களை மக்கள் செய்திமையம் வெளியிட முடிவு செய்துள்ளது..

 சவால் விடும் அமைச்சர்கள்… பதில் சொல்லுவார்களா..

 

                                  

 

 

Comments

comments