பல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி கூட்டணி கடந்த 18 ஆண்டுகளாக ஆலந்தூர், பல்லவபுரம், தாம்பரம், ஆவடி ஆகிய நான்கு நகராட்சிகளில் மட்டுமே பணிபுரிந்து ஊழல் சாதனையை படைத்த சிவக்குமாருக்கு  ஊழல் ரத்னா விருது கொடுக்கலாம்.

 2001லிருந்து சென்னையில்(ஆலந்தூர், பல்லவபுரம், தாம்பரம், ஆவடி நகராட்சிகள்) விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடம் அனைத்துக்கும் காரணம் நகரமைப்பு அதிகாரி சிவக்குமார்தான்..அதிமுக ஆட்சி என்றால் வளர்மதி காரில் வலம் வருவார். திமுக ஆட்சி என்றால் ஆலந்தூர் பாரதி காரில் வலம் வருவார்..

 2014ம் ஆண்டு முடியும் வரை ஆவடி நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றிய போது, சிவக்குமார் கொடுத்த  381 அப்ரூவல்களும், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பானதுதான்..

 நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், பல்லவபுரத்தில் ஆடிக்கொண்டு இருக்கும் ஊழல் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாமல் அறப்போர் இயக்கம் பிளக்ஸ் போர்டு வைத்தது.  நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரகம் கண்டுகொள்ளவில்லை.

 சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி பின்னணியில் இருப்பதால் சிவக்குமாரின் அப்ரூவல் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் மீது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் கூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை..

 2014ஜனவரிம் முதல் இந்த நிமிடம் வரை தாம்பரம், பல்லவபுரம் நகராட்சிகளில் உள்ள அப்ரூவல்களை ஆய்வு செய்தால், இரு நகராட்சிகளில் உள்ள அனைத்து கட்டிடத்தையும் இடிகக் வேண்டியதுதான்..

18 ஆண்டுகளாக நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் அப்ரூவல் நடந்த ஊழலை, சி.எம்.டி.ஏவின் அமுலாக்கபிரிவு கூட கண்டுகொள்ளவில்லை. விதிமுறைகளை, சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் கூட பல்லவபுரம் நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் இடிக்கவில்லை..

 சி.எம்.டி.ஏ உறுப்பினர் –செயலர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ், பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அனுமதி கொடுக்கப்பட்ட அப்ரூவல் தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?

நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் பினாமி நிறுவனம் ஆதம்பாக்கத்தில் செயல்படும் தாய் பில்டர்ஸ்.. 18 ஆண்டு காலமாக தாய் பில்டர்ஸ் செல்வத்தை பினாமி வைத்துக்கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் சிவக்குமார்..

  சிவக்குமாரின் இன்றையை சொத்து மதிப்பு ரூ100கோடியை தாண்டும்…

  சிவக்குமாரின் அப்ரூவல் ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..

             யார் முதலில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்ப்போம்..

Comments

comments