பல்லவபுரம் நகராட்சி- குடி நீர் லாரிக்கு மாதம் ரூ23 இலட்சம்…குடி நீருக்கு ஒதுக்கீடு செய்த ரூ99.95கோடி என்னாச்சு

பல்லவபுரம் நகராட்சி மக்களுக்கு குடி நீர் பற்றாக்குறையை போக்க, ஆண்டுக்கு கோடிக்கணக்கில் மெட்ரோ வாட்டர் மற்றும் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு செலவு செய்யப்படுகிறது.

  நகராட்சி நிர்வாகத்துறை பல்லவபுரம் நகராட்சி குடி நீருக்காக அரசாணை எண்.1/2.1.15ன் படி ரூ99.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பல்லவபுரம் நகராட்சி எம்.பாண்டியன் பெயரில் குடி நீர் லாரிகள் மூலம் சப்ளை செய்ததாக மார்ச் 2017ல் ரூ26.34 இலட்சம், ஏப்ரல் 2017ல் ரூ17.34 இலட்சம், மே 2017ல் ரூ23.65 இலட்சம், ஜூன் 2017ல் ரூ23.52 இலட்சம், ஜூலை 2017ல் ரூ10 இலட்சம் என மாதா, மாதம் பில் போடப்பட்டுள்ளது..மேலும் கைப்பம்பு பாகங்கள் கொள்முதல் செய்ததாக 17.5.17ல் ரூ7.84 இலட்சம் பில் போடப்பட்டுள்ளது.

 நகராட்சி நிர்வாகத்துறை பல்லவபுரம் நகராட்சி குடி நீருக்காக அரசாணை எண்.1/2.1.15ன் படி ரூ99.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த குடி நீர் திட்டம் என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.

  12.4.17ல் குடி நீர் திட்டம் செலவுக்காக தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு ரூ2.21கோடி பில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது..

  பல்லவபுரம் நகராட்சி லாரிகள் மூலம் குடி நீர் சப்ளை என்ற பெயரில் மாதம் ரூ23இலட்சம் என கோடிக்கணக்கில் போலி பில் போடுவது உறுதியாக தெரிகிறது…

  மக்களின் குடி நீர் பற்றாக்குறையை போக்க   பல கோடி செலவு செய்ததாக பல்லவபுரம் நகராட்சிகளில் கோப்புகளில் உள்ளது.  ஆனால் பல்லவபுரம் மக்கள் குடி நீருக்காக அலையும் காட்சி பரிதாபமாக உள்ளது..

  செங்கல்பட்டு மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு கமிசன் போய்விடுவதால் எதையும் கண்டுகொள்வதில்லையாம்..

        இதையெல்லாம் கேட்காதீர்கள்… பெரிய இடத்து விவகாரம் என்கிறார்கள்….

        

 

Comments

comments