பல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழலை மக்கள்செய்தி வெளியிட்டது. பல்லவபுரம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக கொடுக்கப்பட்ட 90 சதவிகித அப்ரூவல்கள் விதிமுறைகளை மீறியது, சட்டத்துக்கு புறம்பானது. மேலும் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும், உறுப்பினர்- செயலர், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம், வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை செயலாளருக்கும் புகார் அனுப்பியது.

 மக்கள்செய்திமையம் புகாரின் பேரில், விஜிலென்ஸ் அதிகாரிகள் 23 பேர் 10.1.19ம் தேதி பிற்பகல் பல்லவபுரம் நகராட்சியில் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினார்கள்.. நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி டேபிளில் ஒரு இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. திருமதி ஜெயந்தி வாக்குமூலத்தில் பணத்தை லைசென்ஸ் சர்வேயர், நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரிடம் கொடுக்க சொல்லி கொடுத்துவிட்டு சென்றார் என்று வாக்குமூலம் கொடுத்தார்.

 இதனை தொடர்ந்து ரூ100கோடி கட்டிட திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட  சிவக்குமார், விஜிலென்ஸ் ரெய்டு என்றவுடன் அலுவலகம் வராமல் தப்பி ஒடினார். விஜிலென்ஸ் அதிகாரிகள் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரை வரவழைத்து, நகரமைப்பு பிரிவில் உள்ள அனைத்து பீரோக்களையும் திறந்தார்கள்..இலஞ்சம் கொடுக்காத காரணத்தால் அப்ரூவலுக்காக பல கோப்புகள் முடங்கி கிடந்தது.

 பல அப்ரூவல் ஊழல் கோப்புகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்..10.1.19ம் தேதி இரவு 10மணி வரை ரெய்டு நடந்தது…

 இதே போல் விஜிலென்ஸ் அதிகாரிகள் தாம்பரம் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, திருவேற்காடு நகராட்சி, பூந்தமல்லி நகராட்சிகளில் அதிரடி ரெய்டு நடத்தினால் போலி அப்ரூவல், போலி பில் ஊழல்கள் சிக்கும்..

 பல்லவபுரம் நகராட்சியின் நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யலாம்..

 பல்லவரபுரம் நகராட்சியில் அதிரடி ரெய்டு நடத்த உத்தரவிட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் ஜெயந்த்முரளி ஐ.பி.எஸ், முருகன் ஐ.பி.எஸ் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி…

  தாம்பரம், செம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்த வேண்டும் என்பது வாக்கு அளித்து, அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் மக்களின் விருப்பம்..

 

 

Comments

comments