பரிசுப் பெட்டக சின்னத்தை.. ஏப்பம் விட்ட வாக்குபதிவு எந்திரம்… விரைவில் புத்தகமாக ஆதாரங்களுடன்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் பொது சின்னம் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தது. இந்திய தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் நடந்த 38மக்களவைத் தேர்தல், 22 சட்டமன்றத் தேர்தல்களில் பரிசுப் பெட்டகம் வெற்றி பெறவில்லை.. பரிசுப் பெட்டகம் சின்னம் கிடைத்து 10 நாட்களில்  22 இலட்சம் வாக்குகள் அதாவது 5.25 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது.

 நம்மிடம் பேசிய அமமுகவின் சென்னை நிர்வாகி, என் வீட்டில் 16 வாக்குகள் சார்..15 வாக்குகள் பரிசுப் பெட்டகத்துக்கு வாக்களித்தோம். ஒருவர் வாக்களிக்க வரவில்லை. என் குடும்பம் வாக்களித்த அந்த தொகுதியின், அந்த வாக்குபதிவு எந்திரம் எண்ணும் இடத்தில் தேர்தல் ஏஜெண்டாக இருந்தேன். அந்த வாக்கு பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணும் போது பரிசுப் பெட்டகத்திற்கு ஒரு வாக்கு கூட விழவில்லை. என் வீட்டில்  உள்ள 15 வாக்குகளில் 14 பேர் என்னை ஏமாற்றி பரிசுப் பெட்டகத்துக்கு வாக்களிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அமமுக நிர்வாகியான நான் போட்ட ஒரு வாக்கு எங்கே போயிற்று என்று கேட்டார்..

 இப்படி பலர் நம்மிடம் பேசினார்கள்.. இது தொடர்பாக பல ஆதாரங்களை சேகரித்து உள்ளோம்..

       பரிசுப் பெட்டக சின்னத்தை வாக்கு பதிவு எந்திரம் ஏப்பம் விட்டு விட்டதா என்பதை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் பேரில் விரைவில் புத்தகமாக வெளியிட மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது..

Comments

comments