பம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…

காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் நகராட்சி என்றாலே தலைவராக இருந்த சி.வி. இளங்கோவன் செல்போன் பேசிக்கொண்டே தேசிய கொடி ஏற்றியதுதான் நினைவுக்கு வருகிறது. பம்மல் நகராட்சி ஊழல், நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி, மூழ்கிவிட்டது..

  சி.எம்.டி.ஏ நிதியிலிருந்து 8.1.2015ல் சங்கர் நகர் 40வது தெரு பூங்காவுக்கு ரூ25 இலட்சமும், ஜெயின் ஹவுசிங்கில் உள்ள பூங்காவுக்கு ரு34 இலட்சமும், விஸ்வேஷபுரம் 148 வது தெருவில் உள்ள பூங்காவுக்கு ரூ25 இலட்சம் என ரூ84 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் மூன்று பூங்கா பணிகள் நடக்கவே இல்லை. ஆனால் பூங்காவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி ரூ84 இலட்சம் என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. சி.எம்.டி.ஏவுக்கு பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்திவிட்டதாக சான்றிதழ் மட்டும் எப்படி அனுப்பினார்கள்?

 2015 பருவ மழையால் 1 முதல் 21 வார்டுகளில் உள்ள பிரதான சாலைகளை மேம்படுத்த என்று ரூ236 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 தார் சாலைகளில் மிகவும் மோசமான உள்ள பகுதிகளில் மட்டும்  ஒட்டு வேலை(பேட்ஜ் ஒர்க்) செய்துவிட்டு, ரூ236 இலட்சத்துக்கு போலி எம்.புத்தகம் எழுதி பங்கு போட்டுக்கொண்டார்களாம்..

 பம்மல் நகராட்சி முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் குவிந்தபடி இருக்கிறதாம்..

  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் செயல்பாடுகள் கொஞ்ச, கொஞ்சமாக முடங்கி போய்விட்டதால், ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பம்மல் பகுதி மக்கள் புலம்புகிறார்கள்…

 

Comments

comments