பத்திரிகையாளர் அன்பழகனை மீண்டும் கைது செய்ய- கொலை செய்ய முயற்சி..ஜாதியை விசாரிக்கும் பூந்தமல்லி தாசில்தார்..கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எங்கே?

மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான அன்பழகன் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு(1379/18) செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

 19.12.18ம் தேதி மாலை 6.10க்கு பூந்தமல்லியின் அன்பழகன் வீட்டு அருகே உக்கடம், வட வள்ளியை கூலிப்படையினரால் தாக்குதல் முயற்சி நடந்தது. துப்பாக்கியால் சுட்டார்கள். சென்னை மாநகர காவல் நிலைய ஆணையருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் அன்பழகன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட  இடத்தில் கிடைந்த  துப்பாக்கி குண்டை கைப்பற்றிய போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.. விசாரணை கூட செய்யவில்லை ஏன்..

 இந் நிலையில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கிரைம் எண்.1379/2018ல் பி.சி.ஆர் சட்டத்தில் கீழ் செக்சன்களை மாற்றியமைத்து, கைது செய்து கோவையில் சிறையில் அடைத்து, கோவை சிறையில் அன்பழகனை கொல்லவும் முயற்சி நடக்கிறது.

 26.12.18ம் தேதி பூந்தமல்லி தாசில்தார் திருமதி புனிதவதி உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் என் வீட்டுக்கு வந்து என் ஜாதி என்று விசாரணை நடத்தியதன் மர்மம் என்ன?

      கோவை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவு உதவி ஆணையர் செளந்தரராஜன், 24.12.18 மற்றும் 25.12.18ம் தேதி மாலை அமைச்சரின் சகோதரரை நகைக்கடையில் சந்தித்த மர்மம் என்ன…

 தமிழக ஆளுநருக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கு புகார் அனுப்பி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..

 அன்பழகன் செத்தால் அதற்கு காரணம் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், கோவை காவல்துறை அதிகாரிகளும் தான்…

 

                                 

                                      

 

Comments

comments