நெய்வேலி அனல் மின் நிலையம் -1மூடப்பட்டது…500 மெகா வாட் அம்போ..இருளில் தமிழகமா…பின்னணி என்ன?

தமிழகத்துக்கு 500 மெகா வாட் மின்சாரம் கொடுத்து வரும் நெய்வேலி அனல் மின் நிலையம் -1 31.3.19 நள்ளிரவு மூடப்பட்டது. 30.3.19 அன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைவர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ் ஆலோசனையின் போது, விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ் காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகமாகிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு போதுமான மின்சாரம் கிடைக்கிறது. அதனால் அனல் மின்நிலையம் -1 மூடிவிடலாம் என்று  கூறினார்.

 1962ல் மின் உற்பத்தியை தொடங்கிய அனல் மின் நிலையம் -1ல்,  திமுக ஆட்சியில் செப்டம்பர் 1970ல் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 600 மெகா வாட் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.

  அனல் மின் நிலையம் -1 பழைய பிளாண்ட் என்பதால், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நெய்வேலி நியூ அனல் மின்நிலைய திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிந்து, இன்னும் நான்கு மாதங்களில் மின்சாரம் உற்பத்தியை தொடங்கும். நெய்வேலி நியூ அனல் மின்நிலைய திட்டம் மின்சாரம் உற்பத்தி தொடங்கியதும், அனல் மின் நிலையம் -1 ஐ மூடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்தார்கள்..

 மக்களவைத் தேர்தல் வருவதால், காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களிடம் அதிமுக அரசு பெரும் தொகையை மக்களவைத் தேர்தலுக்கு பெற்றுள்ளது. அதனால் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு விசுவாசமாக,  தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ், அமைச்சர் தங்கமணி கூட்டணி, அனல் மின் நிலையம் -1லிருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரூ4.91. இதைவிட குறைந்த விலையில் மின்சாரம் எங்களுக்கு கிடைக்கிறது ,அதனால் அனல் மின் நிலையம் -1 லிருந்து மின்சாரம் தேவையில்லை  என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடம் கூறிவிட்டது. அதனால் அனல் மின் நிலையம் -1 மூடப்பட்டது.

 1.4.19லிருந்து 500 மெகா வாட் மின்சாரம் அனல் மின் நிலையம் -1லிருந்து கிடைக்கவில்லை. காற்றாலை மின்சாரம் தொடர்ந்து 500 மெகா வாட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

 நெய்வேலி அனல் மின் நிலையம் -1 மூடப்பட்டதால், 500 மெகா வாட் மின்சாரத்திற்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை.

 அதனால் தமிழகம் அடிக்கடி இருளில் மூழ்க வாய்ப்புகள் அதிகம்.. மக்களவைத் தேர்தலில் நேரத்தில் மின் தடை அடிக்கடி ஏற்பட்டால், மக்கள் அதிமுக அரசுக்கு எதிராக திரும்புவார்கள்..

                  அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை தான்…

 

 

 

Comments

comments