நெஞ்சாலைத்துறை முடங்கி போன ஒப்பந்தப்புள்ளி ஆணையம்.. கோடிக்கணக்கில் ஊழல் பின்னணி..

தமிழக அரசின் நெஞ்சாலைத்துறையில்  டெண்டர் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆணையம் செயல்படாமல் முடங்கி போய்விட்டது. பல ஆயிரம் கோடி டெண்டர் பணிகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் 1996-2001 திமுக ஆட்சியில் அரசாணை எண்.21/25.1.99 & அரசாணை எண்.1/7.1.2010 மற்றும் கடித எண்.2294/எச் என் 1/99-1 நாள் 19.2.99 ன்படி ஒப்பந்தப்புள்ளி ஆணையம் அமைக்கப்பட்டது.

 ஆனால் அதிமுக ஆட்சியில் 2011-19 வரை ஒப்பந்தப்புள்ளி ஆணையம் முடக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலே பல டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

   நெஞ்சாலைத்துறையின் முதன்மை இயக்குநராக இருந்த மா.ராஜாமணி, 19.12.2012ல் நெஞ்சாலைத்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு கோடிக்கு மேல் உள்ள ஒப்பந்தப்புள்ளிகளில் முடிவெடுக்க அதிகாரம் ஒப்பந்தப்புள்ளி ஆணையத்துக்கு வழஙகப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தில் உறுப்பினர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 ஆனால் ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டார்களா என்ற விவரம் நமக்கு கிடைக்கவில்லை. ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் நிதித்துறை செயலாளர் ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் உறுப்பினர் என்ற விவரமே தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 கடந்த 8 ஆண்டுகளில் நெஞ்சாலைத்துறையின் ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் ஒப்புதலின் படி டெண்டர் முடிவு செய்யப்படவில்லை என்பதற்கு நம்மிடம் பல ஆதாரங்கள் உள்ளது.

 நெஞ்சாலைத்துறையில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழலுக்கு முக்கிய காரணமே ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல்/ டெண்டர் முடிவு செய்யப்பட்டப்பிறகு ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தில் பெயரளவுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுதான்..

 இது தொடர்பாக மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி ஆணையம் இருப்பதே தெரியாது..பிறகு எப்படி ஊழல் புகாரை விசாரிப்பார்கள்.. நடவடிக்கை எடுப்பார்கள்…

Comments

comments