நெஞ்சார்ந்த நன்றிகள்.!

சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் மற்றும் சென்னை பிரஸ் கிளப் பொருளாளரும் ஆன வி. அன்பழகன் அவர்களின் படதிறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம் பூவாளூரில் 24-10-2021 காலை 10-00 மணியளவில் நடைபெற்றது.

பல்வேறு பணிகளுக்கிடையே நமது மாவட்ட அமைச்சர் மாண்புமிகு திரு. கே.என். நேரு அவர்கள் கலந்துக் கொண்டு திரு. வி.அன்பழகன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பிலும் மக்கள் செய்தி மையத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலால்குடி சட்ட மன்ற உறுப்பினர் திரு. அ.சௌந்திரபாண்டியன், திருச்சி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு. க. வைரமணி, மாநாகர செயலாளர் திரு மு. அன்பழகன் மற்றும் கழக தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீரவணக்கம் செலுத்திய உறவினர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாவட்ட, மாநில அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில் அதிபர்கள், நகர கழகத்ததை சேர்ந்த திரு சரவணன் மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களுக்கு எங்களது குடும்பத்தின் சார்பிலும், மக்கள் செய்தி மைய குழுமத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • குடும்பத்தினர் மற்றும்
  • Makkal Seithi Maiyam News (OPC) PVT Ltd.
  • Makkal Seithi Maiyam. Com
  • Makkal Seithi Maiyam Publication
  • Makkal Seithi Maiyam News Agency.

Comments

comments

Check Also

FIR

மாஜி ஊழல் அமைச்சர் திரு.S.P.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையால் FIR போடப்பட்டுள்ளது. Comments comments

Leave a Reply

Your email address will not be published.