நிலக்கரி கொள்முதல் ஊழல் -Tender Transparency Act 1998-விலக்கு அளித்த திமுக & அதிமுக

தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தேவையான நிலக்கரி, உலகளவிலான திறந்த ஒப்பந்த புள்ளி மூலம் கொள்முதல் பிப்ரவரி 2008ல் டெண்டர் கோரப்பட்டது. 17.11.2008ல் டெண்டர் திறந்த போது 1. கோல் அண்டு ஆயில் கம்பெனி துபாய் 2. அதானி குலோபல் பிடிஇ லிமிட் சிங்கப்பூர் 3. பாட்டிய இண்டர் நேஷனல் – சென்னை  கலந்து கொண்டது. ஆனால் இந்த டெண்டரை திமுக அரசு ரத்து செய்தது.

 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த சி.பி.சிங் ஐ.ஏ.எஸ், Tender Transparency Act 1998லிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று  4.8.2009ல் தமிழக அரசின் எனர்ஜி செயலாளர் டேவிதார் ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் அனுப்புகிறார்.

 தமிழக அரசின் எனர்சி செயலாளர் டேவிதார் ஐ.ஏ.எஸ் 20.8.2009 அன்று அரசு ஆணை எண்.74ன் படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்ய, Tender Transparency Act 1998 விலக்கு அளிக்கப்பட்டது.

 இதை தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து கமிசன் கொடுக்கும் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 நிலக்கரி கொள்முதலுக்கு Tender Transparency Act 1998லிருந்து ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு இது வரை பதில் கிடைக்கவில்லை.

 2011 -16  அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், 2016 முதல் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் அமைச்சராக இருக்கும் தங்கமணி இருவரும் Tender Transparency Act 1998 லிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய விலக்கு அளிக்கும் அரசு ஆணை எண்.74 ஐ ரத்து செய்யவில்லை..ஏன்…ஏன்..

  நிலக்கரி கொள்முதலில் திமுக அரசின் கொள்கையைதானே, அதிமுக அரசு கடைபிடித்து வருகிறது…பிறகு எப்படி ஊழலைப்பற்றி அதிமுக அமைச்சர் பேச என்ன தகுதி இருக்கிறது..

 திற்ந்த ஒப்பந்தபுள்ளி மூலம் உலகளவில் நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர் கோரியிருந்தால், தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. நிலக்கரிக்கு மத்திய அரசை கெஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் நிலக்கரி கொள்முதலில் ஊழல் செய்ய முடியாது..

  நிலக்கரி கொள்முதலில் கமிசன்  பெறவே Tender Transparency Act 1998லிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை..

 

 

 

 

Comments

comments