நாராயணபுரம் ஏரி பராமரிப்பு ஊழல்-துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு..

சென்னை அருகே உள்ள பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட நாராயணம்புரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில், ஒரு ரூபாய்க்கு கூட பராமரிப்பு பணி செய்யாமல் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் ஊழல் செய்துள்ளார். ரூ15.67கோடியும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.   

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை எண்,.1/2.1.15ல் உலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் கடன் வாங்கி,ரூ2212.89 கோடியில் சில திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது..

  சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டது. அந்த அரசாணையில் Restoration of Narayanapuram lake in corporation of Chennai அதாவது நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ரூ15.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணிக்கான எம்.புத்தகம் நகல் சென்னை மாநகராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்ட போது, நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணியை சென்னை மாநகராட்சி மேற்க்கொள்ளவில்லை. பல்லவபுரம் நகராட்சியை சேர்ந்தது என்று பதில் அளித்தார்கள்..

 பல்லவபுரம் நகராட்சி நாராயணபுரம் ஏரிக்கு எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று  சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பினார்கள்..

 சென்னை மாநகராட்சி நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை மேற்க்கொண்டு வருகிறது என்று துணை தலைமை பொறியாளர் நீர் வள ஆதாரத்துறை கடிதம் அனுப்பியது.

 நீர் வளத்துறையின் துணை தலைமைப் பொறியாளர், இந்த பணியை கீழ்பாலாறு வடி நில கோட்டம் காஞ்சிபுரம் கவனித்து வருகிறது என்று 28.4.18 & 3.5.18  ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பினார்கள்..

 கீழ்பாலாறு வடி நில கோட்டத்தில் செயற்பொறியாளர் பல மாதங்களாகியும் இது வரை எம்.புத்தகம் நகல் அனுப்பவில்லை.. நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணி நடந்திருந்தால்தானே எம்.புத்தகம் நகல் அளிக்க முடியும்.

 நாராயணபுரம் ஏரி ரூ15.67கோடி ஊழல் தொடர்பாக, ஆதாரங்களுடன்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் அளித்த புகாரின் பேரில், தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்தது.

 தலைமைச் செயலாளர் விசாரணை செய்து, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், நீர் வளத்துறை அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்..

 

                                                                                                  

 

Comments

comments

About Anbu Admin

Check Also

மத்திய சென்னை தொகுதி..உழைப்பால் உயர்ந்த சாம் பால்- பணத்தால் உயர்ந்த தயாநிதி மாறன்.. மினி சர்வே…

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சாம் பால் மக்களோடு, மக்களாக பழகியவர். …

Leave a Reply

Your email address will not be published.