நரகத்தில் கருவூலத்துறை ஊழியர்கள்..தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் கூத்து

தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் ஆணையராக இருக்கும் தென்காசி எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ் நல்லவர், பணம் வாங்குவதில் வல்லவர்.. தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் அலுவலக உதவியாளரின் (ஆல் இன் ஆல்) மகன், தான் படிக்கும் பள்ளியில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட பள்ளி நிர்வாகம் தற்காலிக  நீக்கம் செய்துவிட்டது.

  ஆணையர்  தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் யிடம் ஆல் இன் ஆல் உதவியாளர் புலம்பினார். செல்போனை எடுத்த  ஆணையர் சம்பள கணக்கு கிழக்கு அலுவலரை அழைத்து, உதவியாளர் மகன் தற்காலிக  நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்..

 ஆணையர் சொல்லிய பிறகு, சும்மா இருக்க முடியுமா..சம்பள கணக்கு கிழக்கு கருவூல அதிகாரி, அந்த பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் இருவரையும் அழைத்து  அன்பாக மிரட்டினார்.

  அந்த பள்ளிக்கு இரண்டு வருடம் பணம் வழங்கப்பட்ட பட்டியல் எடுத்து, பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டினார் கருவூல அதிகாரி..

 பள்ளி நிர்வாகம் வேறு வழி தெரியாமல், கருவூல அதிகாரிகளை பகைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதால், தென்காசி எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் ஆல் இன் ஆல் உதவியாளரின் மகனை பள்ளியில் மீண்டும் சேர்த்துக்கொண்டார்கள்..

 என்னை ஒண்ணும் பண்ணமுடியாது என்று ஆல் ஆன் ஆல் உதவியாளர் மகன் பள்ளியில் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சவால் விடுகிறாராம்..

சம்பள கணக்கு கருவூலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இனியும் கிழக்கு அலுவலகத்தில் பணியாற்றினால் மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் வேறு கிளைக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பம் கொடுத்து வருகிறார்..

  தென்காசி எஸ். ஜவஹர் ஐ.ஏ.எஸ் அய்யா… ஆல் இன் ஆல் உதவியாளர் மகன், பள்ளியில் குடித்துவிட்டு ரகளை செய்த குற்றத்தைவிட, நீங்கள் காப்பாற்றிய குற்றம்தான் பெரிய குற்றம்…

  தென்காசி எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ் இனியும் கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் ஆணையர் பதவியில் தொடர்ந்தால் கருவூலத்துறை மானம் கப்பல் ஏறிவிடும்…

 

Comments

comments