நக்கீரன் பத்திரிகை அலுவலகம் இடிக்கப்படுமா?

nak-may 001           gopal

நெ-1 புலனாய்வு பத்திரிகை என்ற வாசகத்தை நக்கீரன் பத்திரிகையின் அட்டையில் பிரசுரம் செய்வதை நிறுத்திவிட்டார்கள்…

 உண்மை துணிவு உறுதி இந்த வார்த்தைகள் நக்கீரனுக்கு பொருந்தாது.. நக்கீரனுக்கு பொருந்திய ஒரு வாசகம் மஞ்சள் பத்திரிகை..

 2013 மே 15-17 நக்கீரன் இதழில் அட்டையில் இரண்டு ஆண்டு! சொன்னபடி நடந்தாரா ஜெயலலிதா? என்ற செய்தி வெளியாகி உள்ளது.. அந்த செய்தி இன்னும் தொடருமா?

 செய்தியை எழுதி நிருபர் பிரகாஷின் முக்கிய தொழில் மிரட்டி பணம் வசூலிப்பதுதான்.

   நக்கீரன் பத்திரிகை அரசியல்வாதிகளைப்பற்றி எழுதுவதற்கு முன்பு, தன் முதுகை பார்க்க வேண்டும்.. 49, ஹாரிங்டன் சாலையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டுவந்த நக்கீரன் அலுவலகம், சந்தன கடத்தல் வீரப்பன் புண்ணியத்தில், ஜான் ஜானிகான் சாலையில் சொந்த இடத்துக்கு மாறியது..

 நக்கீரன் அலுவலகம் செயல்படும் 105, ஜான் ஜானிகான் சாலையில் உள்ள கட்டிடம் சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமத்தின் விதிமுறைகளை மீறி கட்டியுள்ளார்கள்.

 பிரிண்டிங் பிரஸ் மற்றும் அலுவலகம் உள்ள முதல் கட்டிடத்திற்கு, சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மூன்று மாடி(தளம்) கட்டப்பட்டுள்ளது.

 பின் பக்கம் நக்கீரன் ஆசிரியர் கோபால் குடியிருக்கும் வீடு உள்ள கட்டிடத்திற்கு சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நான்கு மாடி(தளம்) கட்டப்பட்டுள்ளது

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம், நக்கீரன் பத்திரிகை உரிமையாளர் நக்கீரன் கோபாலுக்கு 17.12.2004, 31.1.07, 29.8.2007ல் மூன்று கடிதங்கள் அனுப்புகிறது.

 நெ-1 புலனாய்வு பத்திரிகை, என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டியதால் அதிகாரிகள் நமக்கே ஏன் வம்பு என்று வாயை மூடிவிட்டார்கள்..

 17.12.2004 சி.எம்.டி.ஏ கடிதத்திற்கும் மட்டும் 8.2.05ல் பதில் கடிதம் அனுப்பினார்கள்.. மற்ற கடிதங்களும் திமுக ஆட்சி என்பதால், பதில் எழுதவும் இல்லை. கடிதத்தைப்பற்றி கவலைப்படவும் இல்லை.

rti act 0010 001      rti act 0020 001

நக்கீரன் பத்திரிகை, திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவு பத்திரிகை. அதனால்தான் 2ஜி புகழ் ஆ.ராசா கைது செய்யப்பட்ட போது, சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில் நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ் வீட்டிலும் நடந்தது. 2ஜி ஊழல் புகழ் ஆ.ராசாவின் பினாமிதான் அ.காமராஜ். பெரம்பலூர் செல்லும் மெயின் ரோட்டில் அதாவது வாலிகண்டபுரத்தில் சுமார் 10,000சதுர அடியில் கிரானைட், மார்பில்ஸ், ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை அ.காமராஜூன் தந்தை அண்ணாமலை பார்த்துக்கொள்கிறார். இந்த ஷோரூமை திறந்து வைத்தது நக்கீரன் ஆசிரியர் கோபால்..

 சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமத்தின் அமுலாக்கப்பிரிவு கணனியில் உள்ள ஷரத்தின்படி 105, ஜான் ஜானிகான் சாலையில் உள்ள கட்டிடம் அனுமதிக்கு புறம்பாக இருந்த நிலையில் கடித எண்.பி1/28120/99 நாள் 16.3.2000 மூலம் பெறப்பட்ட கட்டிடத்தின் பிணை வைப்பு தொகை ரூ40,000/- மற்றும் தாக்வல் பலகைக்கு செலுத்தப்பட்ட ரூ10,000/- பிணைவைப்பு தொகை ஆகியவை கடிதம் எண். இ.எஸ்.1/28696/1996 நாள் 21/2/2003ல் மூலம் தண்டதொகையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது.

 ஆனால் வரன்முறை படுத்தும்பிரிவில் 105, ஜான் ஜானிகான் சாலைக்கு வரன்முறைபடுத்த திட்ட அனுமதி விண்ணப்பம் பெறப்படவில்லை. ஆனால் கதவு எண்.104, ஜான் ஜானிகான் சாலை ராயப்பேட்டை என்ற விலாசத்திற்கு ஒர் திட்ட அனுமதி விண்ணப்பம் பெறப்பட்டு இறுதி முடிவுடுக்கப்பட்டு 6.2.13ல் நாளிட்ட இவ்வலுக கடிதம் மூலம் திட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. என்று சி.எம்.டி.ஏ  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆணையையும் சென்னை பெரு நகரவளர்ச்சிக்குழுமம், நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டது.

 சென்னை பெரு நகரவளர்ச்சிக்குழுமத்தின் கடிதத்தின் படி நக்கீரன் அலுவலகத்தின் முதல் கட்டிடம்(105, ஜான் ஜானிகான் சாலை) அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டிய மூன்றாவது தளத்தில் உள்ள கட்டிடம் இடிக்கப்படும்.

 104, ஜான் ஜான்கான் சாலை முகவரியில் உள்ள கட்டிடம்(நக்கீரன் கோபாலின் குடியிருப்பு) மூன்றாவது, நான்காவது தளங்களில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும்.

 இப்படி அனுமதி பெறாமல் கட்டியுள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகத்துக்குதான், சில மாதங்களுக்கு முன்பு ஏன் குடிநீர், மின்சாரத்தை கட் செய்தீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி மேல் கேட்டது.

 அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன் அப்போது, நக்கீரன் கட்டிடம் அனுமதி பெறாமல், முறைகேடாக கட்டியுள்ளது என்ற தகவலை உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருந்து, சென்னை பெரு நகரவளர்ச்சிக்குழுமத்தின் நோட்டீஸ்களை கொடுத்திருந்தால், நக்கீரன்

பத்திரிகையின் முகத்திரை அன்றே கிழிந்திருக்கும்

..07TH_NAKKEERAN_886813g  Kamaraj

பாவம் சென்னை பெரு நகரவளர்ச்சிக்குழுமத்தின் அதிகாரிகள் அன்று வாயை திறக்கவில்லை.. இன்று அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் அனுப்பிய பிறகும் சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமத்தின் அதிகாரிகள் அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டிய கட்டிடத்தை இடிக்க முன்வரவில்லை. அதற்கு பெரும் தொகை நக்கீரன் அலுவலகம் கொடுத்து, அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிட்டது…

 நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் அ.காமராஜூக்கும் மற்றவர்களைப்பற்றி எழுதி அருகதையே கிடையாது…

 நக்கீரன் பத்திரிகைக்கு சூடு சொரணை எல்லாம் கிடையாது.. அவர்களுக்கு முக்கியமே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பொய்யான செய்தியை வெளியிடுவது மட்டும்தான்..

 பத்திரிகை தர்மம் என்று கூச்சல் போடும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர், சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமத்திலிருந்து அனுமதி மறுக்கப்பட்டதும், முறைகேடாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து இருக்க வேண்டும்.

 பத்திகை ஜனநாயகம் என்ற பெயரில் நக்கீரன் பொய்யான செய்திகளை வெளியீட்டு மிரட்டல் ஜனநாயகத்தை அரங்கேற்றி வருகிறது…

                              மக்கள்செய்திமையம் 15.5.13 மாலை5மணி

 

 

Comments

comments

Clip to Evernote

© 2013 Powered By MakkalSeithiMaiyam Developed By Bharath Technologies

Scroll to top