நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளர் திருவண்ணாமலை மீது டன் கணக்கில் ஊழல் புகார்… காப்பாற்றப்படும் பின்னணி..

     நகராட்சி நிர்வாகத்துறையை ஊழல் துறையை மாற்றிய பெருமை  நகராட்சி நிர்வாகத்துறையின் இணைச் செயலாளராக பணியாற்றும் திருவண்ணாமலையை சேரும். விருத்தாசலம் நகராட்சி ஆணையராக திருவண்ணாமலை பணியாற்றிய போது, ஜனாதிபதி அலுவலகத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய அதிபுத்திசாலி..

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்,மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் என்.எஸ்.நாராயணனுக்கு திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளராக திருநெல்வேலி மாநகராட்சியில் ஈர்த்துக்கொள்ளுதல் மற்றும் காலியாக உள்ள செயற்பொறியாளர்(திட்டம்)  பணியிடத்திற்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் குழப்பமான, விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக   அரசாணை வெளியிட்டு ஊழல் சாதனை செய்தார் இணைச் செயலாளர் திருவண்ணாமலை..

 நகராட்சி நிர்வாக மற்றும் குடி நீர் வழங்கல்துறை(மாந.5)யின் அரசாணை எண்(2ப) எண்.20 தேதி 8.3.2019 இந்த அரசாணை பார்த்தாலே சட்டத்துக்கு புறம்பாக, பல லட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு போடப்பட்ட அரசாணை என்பது தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில்  பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கு தெரியும். அதிகாரமையத்தில் திருவண்ணாமலை வலம் வருவதால், நேர்மையான அதிகாரிகள் வாயை திறக்கவில்லை.

 மக்கள்செய்திமையம் 3.5.19அன்று தலைமைச் செயலாளருக்கு இணைச் செயலாளர் திருவண்ணாமலை ஊழல்கள் தொடர்பாக புகார் கடிதம் அனுப்பியது. ஆனால் நம் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை..ஏன் விசாரணை கூட செய்யப்படவில்லை.

 நகராடசிகளில் பணியாற்றும் கிரேடு -2 ஊழியர்கள் கிரேடு-1 ஊழியராக பதவி உயர்வுக்கு துறை ரீதியான தேர்வு எழுதாமலேயே பல லட்சம் வாங்கிக்கொண்டு பதவி உயர்வு ஆணை வெளியிட முயற்சி செய்வதை தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய புகாரில் குறிப்பிட்டு இருந்தோம்.

  இணைச் செயலாளர் திருவண்ணாமலை மீது டன் கணக்கில் ஊழல் புகார் குவிந்திருந்தும், பல ஊழல் புகார்கள் விஜிலென்ஸ் நிலுவையில் இருந்த நிலையில் 31.5.19 அன்று திருவண்ணாமலை ஒய்வு பெறும் கோப்பு அதிவேகமாக நகருகிறது..

 ஊழல் அதிகாரிகள் காப்பாற்றம்படும் வரை வாக்களித்த அப்பாவி மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காது..

Comments

comments