நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநர் செபஸ்தியான் இலஞ்ச வசூல் – ஆதாரங்களுடன் இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்..

msm-sebas-krishna-comp

நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநர் செப்ஸ்தியான், நகராட்சிகளை மிரட்டி மெகா வசூலில் ஈடுப்பட்டு வருகிறார், பூந்தமல்லி நகராட்சி ஊழல்கள் தொடர்பாக வழக்கறிஞர் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில்  விசாரணை என்ற பெயரில் சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அலுவலத்தில் பூந்தமல்லி நகராட்சியில் பணியாற்றிய, பணியாற்றும் அதிகாரிகளை அழைத்து, மெகா வசூல் செய்தார்.

  திருவேற்காடு நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியும், ஒவர்சீயர் செல்வம் இருவரும் நகராட்சி பொறியாளர் நளினி உடல் நலம் சரியில்லாமல் லீவில் இருந்த போது நகராட்சியில் ரூ3.50 கோடிக்கு டெண்டர் விட்டதாக கோப்புகள் தயார் செய்து, சுருட்டி விட்டார்கள். இந்த விசயம் கூடுதல் இயக்குநர் செபஸ்தியானுக்கு தெரிய வர, திருவேற்காடு நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை மிரட்ட, நான்கு நாட்களுக்கு முன்பு கூடுதல் இயக்குநர் செபஸ்தியானின் நான்காவது மனைவி வீட்டிற்கு ரூ1.87 இலட்சத்திற்கு டிவி வாங்கிக் கொண்டு போய் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஒவர்சீயர் செல்வம், பொறியாளர் நளினி மூவரும் கொடுத்துள்ளார்கள்..

  இப்படி 125 நகராட்சிகளிலும் தீபாவளி பண்டிகை பெயரில் தலா ரூ1 இலட்சம் என கூடுதல் இயக்குநர் செபஸ்தியான் வசூல் செய்து வருகிறார்.

 நகராட்சி நிர்வாக இயக்குநர் செபஸ்தியானின் மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மரகதலிங்கம் காணாமல் போனது முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தில் நடந்து வரும் பல கோடி ஊழல் தொடர்பாகவும், மக்கள்செய்திமையம் ஆதாரத்துடன் விஜிலென்ஸில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளது..

 

Comments

comments