நகராட்சிகளில் அப்ரூவல் ஊழல்….ரூ1000கோடி இலஞ்சம்..ரூ100கோடி சொத்து டாப் -10 நகரமைப்பு அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சியில் மே 2017 முதல் அக்டோபர் 2018 வரை சுமார் 350 வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நகரமைப்பு ஆய்வாளர்  அப்ரூவல் கொடுத்துள்ளார். இதில் 200க்கு அடுக்குமாடி குடியிருப்புகள், சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறிதான் கொடுக்கப்பட்டுள்ளது.

 வீட்டுமனைகள் அதாவது லே அவுட்  கொடுக்கப்பட்ட 44 அப்ரூவல்களும் விதிமுறை மீறல்தான்.  உதாரணமாக  பெருமாள் அகரம் மற்றும் அய்யனம்பாக்கத்தில் BBCL Western construction க்கு கொடுக்க லே அவுட் அப்ரூவலில் விதிமுறை மீறல் தொடர்பாக சி.எம்.டி.ஏ குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்படவே இல்லை..இதை திருவேற்காடு நகராட்சியும் கண்டுகொள்ளவில்லை.

 2017 மே மாதம் டிசம்பர் 2018 வரை திருவேற்காடு நகராட்சியில் கொடுக்கப்பட்ட லே அவுட், அடுக்குமாடி குடியிருப்பு அப்ரூவல்களை, சி.எம்.டி.ஏ தனி குழு அமைத்து ஆய்வு செய்தால், அப்ரூவல் ஊழல் வெளிச்சத்துக்கு வரும்..

 நகரமைப்பு அதிகாரியாக அதிகாரமையத்தில் இருப்பவர் சைவபிள்ளை ஆனால் சோழிய வெள்ளாளர்(பிசி) என்று ஜாதி சான்றிதழில் போலியாக வாங்கியுள்ளார். சீர்காழியில் நகரமைப்பு ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆலந்தூர் நகராட்சிக்கு வந்தார். 18 ஆண்டுகளாக தாம்பரம், பல்லவபுரம்  என்று வலம் வருகிறார். தாம்பரத்தில் மோகன்குமார் ஆணையராக இருக்கும் சி.எம்.டி.ஏ உத்தரவின் பேரில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார்..

   2014ம் ஆண்டு முதல் 2018 டிசம்பர் வரை  தாம்பரம், பல்லவபுரம், மறைமலை நகர், செம்ப்பாக்கம் நகராட்சிகளில் கொடுக்கப்பட்ட லே அவுட், அடுக்குமாடி குடியிருப்பு அப்ரூவல்களை ஆய்வு செய்தால், சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகும்..

  ஆவடியில் 100க்கு மேற்பட்ட விதிமுறைகளை மீறி அப்ரூவல் கொடுத்து, ஊழல் சாதனைப்படைத்த நகரமைப்பு ஆய்வாளருக்கு ஒரு நிறுவனம் ரூ25,000/- கொடுத்த காசோலை நகல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காசோலை திருவள்ளூரில் உள்ள ஒரு வங்கியில் உள்ள கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது..

 ரூ100கோடிக்கு சொத்து சேர்த்துள்ள டாப் -10 நகரமைப்பு ஆய்வாளர், நகரமைப்பு அதிகாரிகளின் சொத்துப்பட்டியலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அதிரடி ஆய்வு செய்தால்..ரூ1000கோடி இலஞ்சம் என்பது உண்மை உறுதியாகும்..

Comments

comments