நகராட்சிகளில் அடுத்த ஊழலா.. பேட்டரி வாகனம் கொள்முதல்..ENCONக்கு கட்டாய டெண்டர்

 

மிழகத்தில் 125 நகராட்சிகளிலும் பேட்டரியால் இயங்கும் வாகனம் கொள்முதல் செய்ய ரூ350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேட்டரியால் இயங்கும் வாகனம் கொள்முதல் டெண்டரில் மெகா முறைகேடு நடந்துள்ளது/நடந்தும் வருகிறது. பேட்டரி வாகனம் குப்பைகளை தரம் பிரித்து, வீடுகளில் பெற பயன்படுத்தப்படுகிறதாம்..

   K.C.P engineers நிறுவனத்தின் சந்திரசேகரின் பினாமி நிறுவனமான ENCON ENGINEERS நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்க, மேலிட உத்தரவாம்.  கோவை மாநகராட்சியில் முதல் வகுப்பு ஒப்பந்ததாராக  வரிசை எண்.88ல் பதிவு செய்துள்ளது.  ENCON ENGINEERS நிறுவனமே டெண்டரில் பல பெயரிகளில் டம்மி டெண்டர்களை கொடுத்துவிடும். இறுதியில் ENCON ENGINEERS நிறுவனம் பேட்டரி வாகனம் சப்ளைக்கான டெண்டரில் இறுதி செய்யப்பட்டுவிடும்.

  கிருஷ்ணகிரி நகராட்சியில் 23 பேட்டரி வாகனம் கொள்முதலுக்கு ENCON ENGINEERS நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 கோவை மாநகராட்சியில் ENCON ENGINEERS நிறுவனமே பேட்டரி வாகனம் சப்ளை செய்துள்ளது.

 வேலூர் மாநகராட்சியில் பேட்டரி வாகனம் கொள்முதலில் மெகா முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல் பம்மல் நகராட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வாகனம், அரசு பேருந்து பாணியில் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்கிறார்கள்..

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள், முதியோர்கள் பயணம் செய்ய கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வாகனம் முதல் நாளே ஸ்டார்ட் ஆகவில்லை. வழக்கம் போல்..தள்ளு..மாடல்..தள்ளுதான்..

 பேட்டரி வாகனம் மூலம் வீடு, வீடாக குப்பைகள் பெறப்படுகிறது. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு, கட்டுப்படுத்த என்ற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு ரூ100கோடி செலவு செய்யப்படுகிறது.2014 முதல் 2018 வரை சுமார் ரூ400கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பிறகு மக்களுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவது யார்….

   ENCON ENGINEERS நிறுவனத்தில் நகராட்சிகளில் பேட்டரி வாகனம் கொள்முதலில் நடந்த/நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

 

                               

Comments

comments