நகராட்சிகளில்அப்ரூவல் ஊழல்- ரூ1000கோடி இலஞ்சம்.. தாம்பரம் – பல்லவபுரம் நகராட்சிகளில் அப்ரூவல் ஊழல் கோப்புகள் மாயம்.. ரூத்ரமூர்த்திக்கு இலஞ்சம் பல கோடி..

தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது நகராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுக்கப்பட்டதில் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் வாங்கிய இலஞ்சம் ரூ1000கோடி..

 சி.எம்.டி.ஏவை சேர்ந்த கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி மற்றும் ரமேஷ்க்கு மட்டும் அப்ரூவல் ஊழலுக்கு நகரமைப்பு அதிகாரிகள் கொடுத்த இலஞ்சம் ரூ100கோடி..

 மக்கள்செய்திமையம் கொடுத்த அப்ரூவல் ஊழல் புகாரின் பேரில், ஆவடி நகராட்சியில் சுமார் 700கோப்புகளும், திருவேற்காடு நகராட்சியில் 300கோப்புகளும் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தாம்பரம், பல்லவபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட நகராட்சியில் நடந்த அப்ரூவல் ஊழல் தொடர்பாக ஒரு கோப்பு கூட ஆய்வுக்கு எடுத்து செல்லப்படவில்லை. அதனால் தாம்பரம் நகராட்சி, பல்லவபுரம் நகராட்சி, பூந்தமல்லி நகராட்சியில் அப்ரூவல் ஊழல் கோப்புகளை தீயிட்டு கொளுத்தி வருகிறார்கள்..

 செம்பாக்கத்தில் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு மட்டும்10.3.2014, 24.3.2014, 26.3.14.27.3.2014, 28.3.2014 ஆகிய நாட்களில் மட்டும் 16 அடுக்குமாடி கட்டிடத்திற்கு விதிமுறைகளை மீறி அப்ருவல் கொடுக்கப்பட்டுள்ளது..

 பல நகரமைப்பு அதிகாரிகள் தாம்பரம், பல்லவபுரம், குரோம்பேட்டை பகுதிகளில் பினாமி பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள்.

 சி.எம்.டி.ஏ உத்தரவிட்டு ஆவடி, திருவேற்காடு நகராட்சிகளில்  சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட அப்ருவல்களை இடிக்கவில்லை ஏன்?

 பூந்தமல்லி நகராட்சியில் கோல்டன் ஹோம் பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு கொடுக்கப்பட்ட அப்ரூவலில் நடந்த முறைகேட்டில் சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..

 அப்ரூவல் ஊழலிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆவடி நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன், திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனிடம் அடைக்கலமாகி உள்ளார்…

 நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், நகராட்சிகளில் கொடிக்கட்டி பறக்கும் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை கண்டுகொள்வதே இல்லை..பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு ஆஸ்தான் ஆலோசகர் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் முருகேசன் சொல்வதற்கு மட்டும் தலையாட்டுகிறார்.. பாவம்….

 சி.எம்.டி.ஏ உறுப்பினர்-செயலர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்…

 

 

Comments

comments