தோழர் நல்லக்கண்ணுஅய்யா வீடு விவகாரம்.. நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்து உதயசூரியனில் போட்டி

மூத்த அரசியல்வாதி தோழர் நல்லக்கண்ணு அய்யா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் இருவரும்  தி.நகர் சி.ஐ.டி காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீட்டில் குடியிருந்தார்கள். இந்த வீட்டை காலி செய்ய தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் உத்தரவிட்டது.  நல்லக்கண்ணு அய்யா வீட்டை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டுக்கு குடி போய்விட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தோழர் நல்லக்கண்ணு அய்யாவுக்கு, வேறு வீடு ஒதுக்கி இருக்க வேண்டும். வீடு ஒதுக்கீடு செய்யாமல் வீட்டை காலி செய்ய சொன்ன தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரிகளுக்கு மக்கள்செய்திமையம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

  தோழர் நல்லக்கண்ணு அய்யா, வீடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விட தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் இராமாபுரம் கிராமம் சர்வே எண்.134/1 ல் 2.28 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. இந்த நிலம் 3.3.95ல் வீட்டு வசதி வாரியத்தால் சுவாதீனம் பெற்ற நிலமாகும். சுமார் ரூ300கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2.28ஏக்கர் நிலத்தை வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை பெயரில் பச்சமுத்து ஆக்ரமித்துள்ளார்.

  பச்சமுத்து ஆக்ரமித்த தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் நிலத்தை கையகப்படுத்துமாறு, உயர்நீதிமன்றத்தின் அமர்வு தீர்ப்பு வழங்கி, பச்சமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் இது வரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பச்சமுத்துவிடமிருந்து 2.28 ஏக்கரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

 ரூ300கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை ஆக்ரமித்துள்ள பச்சமுத்து,  பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார். பெரம்பலூர் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பச்சமுத்துவின் பண மழையில் குளித்தார்கள்.. தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்தின் நிலத்தை ஆக்ரமித்த பச்சமுத்துவுக்கு ஆதரவாக சிபிஐ, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ததை தோழர்கள் மறந்துவிட்டார்களா..

 நில ஆக்ரமிப்பு மாபியா, மத்திய இணை அமைச்சர் கனவில் மிதக்கிறார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நிலத்தை ஆக்ரமித்த பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் குடியிருப்பில் குடியிருந்த தோழர் நல்லக்கண்ணு அய்யா, காலி செய்ய சொன்ன தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்துக்கு கண்டனம் தெரிவிக்க, நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்துவிடம் விலை போன திமுகவுக்கு தகுதி இல்லை..

Comments

comments