தேவி கருமாரியம்மன் கோயில் திருவேற்காடு -1006 இலவச திருமணத்தில் கொள்ளையோ கொள்ளை..

இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 18.6.2012ல் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காட்டில் 1006 இலவச திருமணங்கள் நடந்தது. இந்த இலவச திருமண விழாவிற்கு கோடிக்கணக்கில் போலி பில் போட்டு மெகா கொள்ளை நடந்தது.

 திருமண விழா நடைபெறும் இடத்தில் மணல் பரப்ப ரூ7.21 இலட்சமாம்..எம்.பழனிச்சாமி பெயரில் போடப்பட்ட பில்லை பாருங்கள்…

  மணமக்கள், பொது மக்கள், உறவினர்கள் அமரும் பொருட்டு விழா பந்தல், மேடை, தடுப்பு வரிசை அமைத்தது என்று எம்.குமரேசன் பெயரில் போடப்பட்ட பில் ரூ27.40 இலட்சம்..இந்த பில்லை பாருங்கள் போலி பில் என்பது உறுதி செய்யப்படும்..

 1006 மணமகளுக்கு தாலிக்கு தங்கம் கொள்முதல் செய்ய, தினபூமி நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டதாம்.. விளம்பர கட்டணம் ரூ6617/-

 1006 மணமகளுக்கு 8கிராமில் தாலி என்று கணக்கீட்டால், 8048 கிராம் தங்கம்.. 8கிராமில் தாலி செய்து கொடுக்க ரூ20,000 முதல் ரூ22,000 வரை செலவாகியிருக்கும்..மொத்த செலவு ரூ2கோடியை தாண்டும்..

 ரூ2கோடியில் மதிப்பில் தங்கத்தில் தாலி கொள்முதல் செய்ய தினபூமியில் விளம்பரம் செய்த தொகை ரூ6617…டெண்டர் டிரான்பரன்சி சட்டம் 1998ன் படி விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது..

  டெண்டர் டிரான்பரன்சி சட்டம் 1998ல் ரூ2கோடி மதிப்பில் டெண்டர் என்றால் விற்பனை அதிகமுள்ள  ஆங்கிலம், தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.. தினபூமி நாளிதழ் 2012ல் பி.ஆர்.ஒ அலுவலகங்களுக்கு மட்டுமே அச்சிட்டு வழங்கப்பட்டது. வெளிமார்க்கெட்டில் விற்பனையே இல்லை..

 இப்படி 1006 இலவச திருமணத்தில் பல கோடி போலி பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளது..

  பராசக்தி திரைப்படத்தின் வசனம்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.. கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை.. கோயில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது..

 

 

Comments

comments