தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ் – ஏமாந்தாரா..ஏமாற்றப்படுகிறரா…பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஏன் மாற்றப்படவில்லை..

மக்களவைத் தேர்தல் வருவதால், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள், ஏட்டு, எஸ்.ஐ வரை மாற்றப்பட்டு வருகிறார்கள்.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ் ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது.

 நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நகராட்சி நிர்வாக ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள். இருவருக்கும் என்ன மியூச்சுவல் மாற்றமா?

  கடந்த 5ஆண்டுகளாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யின் செயல்பாடுகளால் 12,600 கிராம பஞ்சாய்த்தும் சீரழிந்து போய்விட்டது. கிராம பஞ்சாய்த்துக்கள் ஊழலில் சிக்கி தவிக்கிறது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட சரியாக கிடைக்கவில்லை..

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது,  விதிமுறைகளை மீறிய, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட புளு மெட்டல் குவாரிகளுக்கு போடப்பட்ட ரூ300கோடி அபராதத்தை ரத்து செய்து, சாதனை படைத்தார் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்..

 ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக ஐந்தண்டு காலமாக பணியாற்றும் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஏன் மாற்றப்படவில்லை..

 சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ள திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ், ஆந்திரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அயல்பணியில் தமிழக அரசுக்கு வந்தார். இரு மாநில அரசு ஒப்புதலுடன், தமிழக அரசின்  கேடருக்கு மாற்றப்பட்டார் என்று தெரியவில்லை..

  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில், மக்களவைத் தேர்தலுக்காக அதிகாரம் மையத்தில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, தங்கள் மாவட்டங்கள், தங்கள் துறைகளுக்கு மாற்றிக்கொண்டார்கள்…

  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மாற்றத்தை பார்க்கும் போது, ஆளும் அதிமுக கட்சி மக்களவைத் தேர்தலில் பண பலத்தால் மக்களை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது என்பது உறுதியாக தெரிகிறது..

  பாவம்.. தேர்தல் ஆணையர் சத்யபிரபாசாகு ஐ.ஏ.எஸ் என்ன செய்வார்…

 

 

 

Comments

comments