தேர்தலை ஆணையத்தை ஏமாற்றும் தமிழக அரசு – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படாதது ஏன்? -நகரமைப்பு அதிகாரி மாறன் தூத்துக்குடியில் ஏன் சேரவில்லை

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் மாற்ற வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு சில அதிகாரிகளை மாற்றியது.

 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.  அதனால்  இயக்குநர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை மாறுதல் செய்ய வேண்டும் என்று 25.2.19ல் தமிழக தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ் மக்கள்செய்திமையம் கடிதம் அனுப்பியது.  ஆனால் 10.3.19ம் தேதி வரை  மாற்றப்படவில்லை. 12,600 கிராம பஞ்சாய்த்து நிர்வாகத்தின் செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஏன் மாற்றப்படவில்லை என்ற தமிழக தேர்தல் ஆணையர்தான் பதில் சொல்ல  வேண்டும்..

 பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மூலமாக 12,600 கிராம பஞ்சாய்த்துக்களிலும் ,ஆளும் கட்சிக்கு வாக்களிக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது.

 அதே போல் நகராட்சி நிர்வாகம்,  நாமக்கல் நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றிய எஸ்.வி. மாறனை, பதவி உயர்வில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 7.2.19ல் மாறுதல் செய்தது. 30 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நகரமைப்பு அதிகாரி மாறன் பணியில் சேரவில்லை.

 மக்கள் தொடர்புடைய அதிகாரியாக இல்லாவிட்டாலும், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், நிதித்துறையில் எட்டு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்..எப்படி?

   தமிழக தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ், தமிழகத்தில்  சுதந்திரமாக மக்கள் வாக்களிக்கும்  நிலையை உறுதி செய்ய வேண்டும்.

  

   

  

                     

                    

                   

 

Comments

comments