
தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினமும் மக்கள் குடி நிருக்காக சாலை மறியல் செய்கிறார்கள்.. மழை நீரை தேக்கி வைக்க திட்டம் எதுவும் 8ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏரி, குளம், கண்வாய்களை ஆழப்படுத்தியதாக, பராமரிப்பு செய்ததாக நகராட்சிகளில் போலி பில் போட்டு சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் குடி நீர் அவல நிலை பாருங்கள்… தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையரகம் கொடுத்த 31.5.19ம் தேதி குடி நீர் நிலவரம்…
தேனி மாவட்டம்…
- தேனி அல்லிநகரம் நகராட்சி – மூன்று நாளைக்கு ஒரு முறை(உண்மையில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை)
- கம்பம் நகராட்சி – இரண்டு நாளைக்கு ஒரு முறை(உண்மையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை)
- பெரியகுளம் நகராட்சி – தினமும்(உண்மையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை)
- சின்னமனூர் நகராட்சி – ஒரு நாள் விட்டு ஒரு நாள்(உண்மையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை)
- கூடலூர் நகராட்சி – ஒரு நாள் விட்டு ஒரு நாள்(உண்மையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை)
திண்டுக்கல் மாவட்டம்…
- கொடைக்கானல் நகராட்சி – ஐந்து நாட்களுக்கு ஒரு முறை( உண்மையில் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுக்கிறதா? )
- பழனி நகராட்சி – மூன்று நாளைக்கு ஒரு முறை
- ஒட்டன்சத்திரம் நகராட்சி – ஐந்து நாட்களுக்கு ஒரு முறை
துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் & தேனி மக்களவைத் தொகுதி எம்.பியும் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் மாவட்டத்திலேயே குடி நீர் பஞ்சம்..

இப்படி நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கு நகராட்சிகளின் ஆணையர்கள் குடி நீர் பஞ்சம் என்றால், தம்மை மாற்றிவிடுவார்களோ என்று தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார்கள்..1.6.19 முதல் குடி நீர் பஞ்சம் மிகவும் மோசமாக உள்ளது.
உண்மையில் குடி நீர் பஞ்சாத்தால், வாக்களித்த மக்கள் பிளாஸ்டிக் காலி குடங்களை வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் குடி நீர் லாரி வருமா என்று பல மணி நேரம் காத்துக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகிறது. ஆனால் அதிகாரமையத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் குடி நீர் பஞ்சத்தை பற்றி கவலைபடவே இல்லை.
( நாளை திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் நிலை)