தூத்துக்குடி – ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை…இலட்சம் பேர் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை பிளண்ட் -1ல் லைசென்ஸ் புதுப்பிக்க, மாறுதல்களுடன் கொடுக்கப்பட்ட மனுவை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்றுக்கொண்டது. இன்னும் ஒரு சில நாட்களில் ஸ்டெர்லைட் ஆலையின் பிளண்ட் -1 லைசென்ஸ் புதுப்பித்து, உத்தரவு வெளியாகிவிடும். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கம் பிளண்ட் -2யின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது..

 இதனால் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட 16க்கு மேற்பட்ட கிராம மக்களுடன் போராட்டக் குழு ஆலோசனை செய்தார்கள்..

   ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி நகரின் முக்கிய இடத்தில், அதிரடியாக  ஒரு இலட்சம் பேரை திரட்டி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக போராட்டத்தில் ஈடுபடும் 50,000 பேருக்கு உணவு, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் செலவாகும் தொகையை திரட்டுவது தொடர்பாக வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல வேறு அமைப்புகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

 பல சமூக அமைப்புகள், வணிகர் சங்கங்கள் 50,000 – 60,000 பேருக்கு 20 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த, உணவு, குடி நீர் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை  செய்து கொடுக்க, உறுதியளித்துள்ளது..

தூத்துக்குடி  மாவட்ட மக்கள் 50,000 பேருடன்,  சென்னை உள்ளிட்ட  சில மாவட்டங்களிலிருந்தும் 30,000 பேர் கலந்து கொள்ள, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது…

 சென்னை மெரினா கடற்கரையில் இலட்சக்கணக்கானவர் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வெற்றி அடைந்தது. அதே போல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் சில நாட்கள் தொடங்கும்..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட,  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமே முடங்கி போகும் நிலைக்கு ஒரு இலட்சம் பேர் போராட்டம் வெற்றி பெற மக்கள்செய்திமையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..

 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான ஒரு இலட்சம் பேர் போராட்டம், இந்தியா அளவில் போராட்ட களமாக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது…

                      

 

 

Comments

comments