தூத்துக்குடி – ரேசன் கடைகளிலிருந்து அரிசி, சீனி, பருப்பு கடத்தலாம்! காப்பாற்றுவார் கலெக்டர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்

20160825_102057

20160825_102412

இந்தியாவில் ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தருவது வருவாய்துறை அதற்கு அடுத்தாற்போல் இருப்பது கூட்டுறவு, உணவுத்துறை தான். இந்த இரண்டு துறைகள் தான் தமிழகம் முழுவதும் நியாய விலைகடைகள்(ரேசன் கடைகள்)  மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவி விலையில்  அரிசி, சீனி, பாமாயில், மண்ணெண்ணை, பருப்பு வகைகளும், இலவச வேஷ்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. இது சரியான முறையில் வழங்கப்பட்டால் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படுகிறது. இதில் முறைகேடு ஏற்பட்டால் ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடும். ஏன் என்றால் இந்த கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்கள் வறுமை கோர்ட்டிற்கு கீழ் இருப்பவர்களும், ஏழை மக்களும் தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

20160825_10141420160825_102255   கூட்டுறவுதுறை, உணவுதுறை மூலம் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் முறை கேடு புகார் மக்கள் செய்தி மையத்திற்கு வந்ததையடுத்து புகாருக்கு ஆளான பகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியான மாப்பிள்ளையூரணி தொடக்க வேளாண் கூட்டுறவு கடை எண் A.P.O. 48 மீதுதான் புகார். இந்த புகார் தொடர்பாக ரவிக்குமார் மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், சிவில் சப்ளை தாசில்தார் வெங்கடாசலம்,  பறக்கும்படை தாசில்தார் சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து விட்டு புகாருக்கு ஆளான கடை முன்பு கூடியருந்த மக்களுடன் 2 மணி நேரம் இருந்ததில் பல விஷயங்களும், யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்படுகிறது  என்ற விபரம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாருக்கு உரிய ரேசன் கடையில் 450க்கு மேற்பட்ட கார்டுகள் உள்ளது. கடையின் பணியாளர் மரகதவள்ளி பியூலா  ஏற்கனவே  இரண்டு முறை புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அரிசி, சீனி, மலிவு விலை துவரம்பருப்பு போன்ற பொருட்கள் வாங்காத நபர்களுக்கு பருப்பு, அரிசி,சீனி வாங்கியதாக அந்தந்த 96 நபர்களுக்கு செல்போன் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அரிசி, சீனி போன்ற பொருட்கள் வாங்காத போது, வாங்கியதாக போலி பில் போட்டு வெளி மார்க்கெட்டில் விலைக்கு விற்றுவிடுவார் மரகதவள்ளி. டேவிஸ்புரத்தை சேர்ந்த ஜெஸி அந்தோணியம்மாள் ஒரு கண் பார்வை இழந்த வயதான மூதாட்டியிடம் கேட்ட போது என் கார்டுக்கு 12 கிலோ அரிசி 5 மாதமாக அரிசி வழங்கவில்லை. ஆனால் போலியாக  கார்டில் பதிவு செய்து உள்ளார்கள். இந்த மாதம் கேட்ட போது கடையில் பணி புரியும் பெண் என்னை கேவலமாக திட்டினார். இந்த புளுத்த அரிசியை சாப்பிட வேண்டாம். பொன்னி அரிசி வாங்க சாப்பிடவும் என்று திமிராக பேசி,  நீ சாக வேண்டியதானே, இன்னும் ரேசன் கடைக்கு அலைகிறாய் என்று  திட்டியதை கூறும் போது பாட்டி கண் கலங்கி அழுது விட்டது. து.து.நகரை சேர்ந்த சொர்ணம் என்ற பெண் கூறுகையில் என்னுடைய குடும்ப அட்டையில் துவரம் பருப்பு 1கிலோ பதிந்து விட்டது பற்றி கேட்டதற்கு 25ம் தேதி வந்து வாங்கி கொள்ளவும் என்று மிரட்டி கூறி அனுப்பினார்.  மேலும் சந்தனமாரி, ராமலெட்சுமி, லட்சுமண பெருமாள் உட்பட 17 பெண்களுக்கு அரிசி தராமல் ரேசன் கார்டில் பதிந்து விட்டார்கள் கேட்டால் நல்ல அரிசி வரவில்லை வந்தவுடன் தந்து விடுவேன் என்று அலட்சியமாக பதில் சொல்லுகிறார் மரகதவள்ளி.  போலியாக அரிசி, சீனி, பருப்பு வாங்கியதாக ரேசன் கார்டில் பதிவு செய்யப்பட்ட  கார்டு எண்கள்: 28/G/0010436, 28/G/0169400, 28/G/0010426  உள்ளிட்ட கார்டுகள் அடங்கும் அ.தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்ட கடை பணியாளர் மரகதவள்ளி பியூலாவிற்கு ஆதரவாக அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பால்ராஜ் செயல்பட்டுள்ளது, வியப்பாக உள்ளது.

20160825_10441620160825_104344

    இந்த புகார் பற்றி சிவில் சப்ளை தாசில்தார் வெங்கடாசலத்திடம் கேட்ட போது புகார் ஒன்றும் பெரியதாக இல்லை. செல்போன் எஸ்.எம்.எஸ்ஸில்  பற்றி கேட்டதற்கு ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் இந்த கடையில் இருந்து வந்தது கிடையாது. மற்றொன்று விசாரித்து வருகிறேன் என்றார். எஸ்.எம்.எஸ் வந்த நபர் 6 வருடமாக இங்கே தான் இருக்கிறார். அப்படி இருக்கையில் எப்படி மாறும் என்று கேட்டதற்கு பதில் இல்லை. ரேசன் கார்டில் பதிவு செய்து விட்டு அரிசி, பருப்புகள் வழங்காமல் உள்ளது பற்றி கேட்டதற்கு அரிசி இப்பொழுது கொடுக்கப்பட்டு விட்டது என்று சிவில் சப்ளை தாசில்தார் வெங்கடாசலம் கூறினார். புகார் உறுதி செய்யப்பட்டும் A.P.O. 48  கடை பணியாளர் மரகதவள்ளி பியூலாவை காப்பாற்றும் நோக்கத்தில் தான் அதிகாரிகள் அனைவரும் செயல்பட்டார்கள். ஏனென்றால் மரகதவள்ளி, அதிகாரிகளுக்கு மாதா, மாதம் மாமுல் கொடுத்துவிடுகிறார். அதுபோல தபால்தந்தி ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலை கடை ADO – 10  பணி புரியும் மதன், ADO – 11-ல் பணிபுரியும் முருகலெட்சுமி இரண்டு கடைகளிலும் சேர்த்து 1300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. கடை பணியாளர்கள் மதன், முருகலெட்சுமி இருவரும் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக இரண்டு சக்கர வண்டியில் பொருட்களை ஏற்றி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.   தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்படும் நிலையிலும் வாக்களித்த ஏழை மக்களுக்காக குடும்ப அட்டைகளுக்கு மலிவு விலையில்  விநியோக செய்ய அனுப்பும்  பொருட்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதை  தடுக்குமா தமிழக அரசு! கடத்தல் தொடருமா!

collector_1546068f

 அரிசி, சீனி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் எந்த நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளார்.

 மக்கள்செய்திமையம் 28.8.2016

 

 

 

Comments

comments