தூத்துக்குடி – முதல்வர் உத்தரவுக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன்…

Chellapandian minister TAX

IMG_5111

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்லப்பாண்டியன் தற்போது முதல்வர் உத்தரவுக்கு எதிராகவும், மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த செல்லப்பாண்டியன் தோல்விக்கு மேயர் அந்தோணி கிரேஸ்தான் காரணம் என்று அ.தி.மு.க. தலைமையிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையில்  மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சரவணன், ரவிநாதன், முதுநிலை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் மற்றும் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜ் ஆகியோர் திட்டமிட்டு செல்லப்பாண்டியன் தோல்விக்கு குடிநீர் பிரச்சனையை உருவாக்கி திமுக வேட்பாளர் கீதாஜீவன் வெற்றிபெற வைத்தாக கூறியுள்ளது.  இதனையடுத்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக உதவி ஆணையர் சரவணனை தாராபுரத்திற்கும், ரவிநாதனை கடையநல்லூருக்கும் மாறுதல் செய்யப்பட்டு உத்தரவு வந்தது. உத்தரவில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

_MG_1919

????????????????????????????????????

திமுக நிர்வாகி ஜோதிமணி, சரவணன், ரவிநாதனை செல்லப்பாண்டியனிடம் அழைத்துச் சென்று இருவருக்கான பணிமாறுதலை நிறுத்தி வைக்குமாறு இவர்கள் இருவர்தான் 4வது குடிநீர் பைப்லைன் பணிகளை மேற்கொள்கின்றனர் என்று கூறினார். இதனையடுத்து செல்லப்பாண்டியன் மாநகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரவணன், ரவிநாதன் இருவருக்கான பணிமாறுதலை தாமதப்படுத்துமாறும் விடுவிக்க வேண்டாம். நான் மேலிட்த்தில் பேசிக்கொள்கிறேன் என்று கூறினார்.  மாறுதல் செய்யப்பட்ட இருவரும் திமுக-விற்கு நேரடியாகவே ஆதரவு கரம் நீட்டியவர்கள். அப்படியிருக்கையில் முதல்வரின் உத்தரவுக்கு எதிராக செல்லப்பாண்டியன் செயல்பட்டது வியப்பாக உள்ளது.

20160821_09561920160821_095657

   அதுபோல தேவர்புரம் ரோட்டில் ஹோட்டல் ஆல்வினுக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்தக் காலியிடத்தில் கருப்பசாமி கோவில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை அருகில் உள்ள தனியார் பள்ளி நிறுவனம் ஆக்கிரமித்து மூன்று புறமும் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், முதுநிலை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பனை அழைத்து உடனடியாக மாநராட்சியிடத்தில் சுவர் கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும். கட்டப்பட்ட சுவரை இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை அடுத்து இடிப்பதற்கு சென்ற அதிகாரிகல் இடிக்காமல் திரும்பி வந்தது வியப்பாக உள்ளது. இதற்கு ராக்கப்பன் தரப்பில் அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தொடர்பு கொண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள வேளையில் இதை இடித்தால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று இடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கூறுவதற்கு இது பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. தனியார் பள்ளி நிர்வாக ஆக்கிரமிப்பு செய்கிறது.  அதிமுக மாவட்ட செயலாளர்  செல்லப்பாண்டியன், ஆதரவு கரம் நீட்டியது பின்னணியில் விசாரித்தால் பண பரிமாற்றம் நடந்துள்ளது, தெளிவாக தெரிகிறது.

   அதிமுக மாவட்ட செயலாளராக செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகாத நிலையில் திமுகவிற்கு ஆதரவாக, முதல்வர் உத்தரவுக்கு எதிராக செயல்படுகிறார் என்று அதிமுக பொது செயலாளருக்கு பல புகார் குவிந்துள்ளது. செல்லப்பாண்டியனுக்கு எதிரான புகார்களை, விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 செல்லப்பாண்டியனுக்கு எதிராக, மாவட்ட செயலாளர் பதவியை குறி வைத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ காய்களை நகர்த்தி வருகிறார்..

 மக்கள்செய்திமையம் 22.8.16 மாலை 4மணி

 

Comments

comments

About Anbu Admin

Check Also

FIR

மாஜி ஊழல் அமைச்சர் திரு.S.P.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையால் FIR போடப்பட்டுள்ளது. Comments comments

Leave a Reply

Your email address will not be published.