தூத்துக்குடி மாநகராட்சி – பாசி மீன் ஊழல்

 

தூத்துக்குடி மாநகராட்சியில் விஞ்ஞான முறையில் இல்லை..அதி நவீன விஞ்ஞான முறையில் ஊழல் நடந்து வருகிறது.  வருமான வரித்துறையில் சிக்கிய கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, SPK construction நாகராஜன் இருவரும் தூத்துக்குடி மாநகராட்சியின் பாசி மீன் ஊழலை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டார்கள்..

தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகளில் உள்ள  கிணறு, குடி நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் பரவும் பாசியை உண்ணும் மீன்களை போடுவது வழக்கம். கிணறு, குடி நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் பாசி மீன் போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள், பாசி மீன் கொள்முதல் செய்யாமல் அதி நவீன விஞ்ஞான முறையில் ஊழல் அரங்கேற்றி வருகிறார்கள்..60 வார்டுகளில் உள்ள ஒரு இலட்சம் வீடுகள், வணிக வளாகங்களில் உள்ள கிணறுகள், குடி நீர் தொட்டிகளில் பாசி படராமல் இருக்க, பாசியை உண்ணும் மீன்களை போட வேண்டும் என்று  கட்டாயப்படுத்துகிறார்கள்.. பாசி மீன் இலவசமாக கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாசி மீன் வீடுகளுக்கு இலவசமாக கொடுப்பதில்லை..இங்குதான் அதி நவீன விஞ்ஞானம் முறையில் ஊழல் நடந்து வருகிறது..

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீன் விற்பனை செய்யும் JUDES AQUARIUM  உள்ளிட்ட கடைகளில் பாசி மீனை மக்கள் விலைக்கு வாங்கும் போது(இரண்டு மீன் விலை ரூ30/-) பில் தூத்துக்குடி மாநகராட்சி பெயரில் கொடுப்பார்கள்… JUDES AQUARIUM  மீன் கடையில் நான் மீன் வாங்குகிறேன், என் பெயரில் பில் போடாமல், மாநகராட்சி பெயரில் பில் போடுவது நியாயமா என்று கேட்டால், அப்படிதான் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு போட்டு உள்ளார்கள் என்று அலட்சியமாக பதில் சொல்லுகிறார்…

  தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் பாசி மீன் தொட்டிகளில் போடப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்வது போல், வீடுகளுக்கு வந்து தூத்துக்குடி மாநகராட்சி பெயரில் போடப்பட்ட பில்களை வாங்கி சென்றுவிடுவார்கள்…

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் குடி நீர் தொட்டி இருக்கிறது. ஒரு தொட்டிக்கு ரூ30/- என்று கணக்கீட்டால் ரூ30 இலட்சம் போலி பில் போடப்படுகிறது..

தூத்துக்குடி மாநகராட்சி பாசி மீன் ஊழல் தொடர்பாக விஜிலென்ஸ் இயக்குநரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது..

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் Dr ALBY JOHN VARGHESE IAS பாசி மீன் ஊழல் தொடர்பாக  நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது…

                         பார்ப்போம்..என்ன..நடக்கிறது…என்று…

 

 

Comments

comments