தூத்துக்குடி மாநகராட்சி – குடி நீர் பஞ்சம் – ஆமை வேகத்தில் 4வது பைப் லைன் திட்டம் – உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்..

IMG_8959IMG_8909

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது பத்து நாட்களுக்கு ஒரு நாள்தான் மாநகராட்சி நிர்வாகம்  குடிநீர் வழங்குகிறது.  ஆனால் 37 மாமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க வசம் இருந்தும் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு யாரும் முன் வரவில்லை. தமிழக முதலமைச்சர் அறிவித்த சுமார் ரூ240 கோடியில் நான்காவது பைப் லைன் திட்டம் இதே வருகிறது,  அதே வருகிறது என்று  ஆணையரும் மேயரும் மாறி, மாறி கூறி வருகிறார்கள். ஆனால் நான்காவது பைப் லைன் திட்டம் வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஆனால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், மேயர், ஆணையர் சொல்வதை  நம்பி உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு 4 வது பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும், நாம் மீண்டும் மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவுலகில் மிதந்தார்கள்.

  இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 29 ம் தேதி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் ஒரு கோஷ்டியும், துணை மேயர் சேவியா; தலைமையில் ஒரு அணியும் நான்காவது பைப் லைன் பணியை பார்வையிட சென்றது வியப்பாக உள்ளது. காலை 8.00 மணியளவில்  தன் மகன் கவியரசை அழைத்து கொண்டு மேயர் அந்தோணி கிரேஸ் 4 வது பைப் லைன் நீர் ஏற்றும் நிலையமான மருதூர்அணைக்கட்டு பகுதிக்கு சென்று பணிகளை பார்வையிட்டு பணிகளை வேகமாக செய்யுமாறு அறிவுறுத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த மாதம் 21 ம் தேதி 4 வது பை;ப லைன் குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் சோதனை ஓட்டம் நடைபெறவில்லை. 29 ம் தேதி காலை 11.00மணியளவில் துணை மேயர் சேவியர் தலைமையில் 36 அதிமுக மாமன்ற உறுப்பினர் கள் மருதூர் அணை பகுதிக்கு சென்று குடிநீரை ஆய்வு செய்ய சென்றார்கள்.  மருதூர் அணைக்கட்டு 4 வது பைப் லைன் நடைபெறும் இடம் தெரியாமல் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி சீவலப்பேரி வழியாக மருதூர் அணைக்கட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.  இதற்கு துணை மேயர் சேவியர் 5 வருட காலத்தில் ஒரு முறை கூட நான்  மருதூர் அணைக்கட்டுக்கு பக்கம் தலையை காட்டியது இல்லை. அதுபோல அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் சென்றது கிடையாது. அங்கு சென்று பணிகளை பார்த்த பொழுது அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. பணிகள் எப்பொழுது முடியும் என்று பொறியாளர் லட்சுமணனிடம் கேட்ட பொழுது மின்சார பணிகள் மட்டும் முடிய 35 நாட்களுக்குள் மேலாகும். அதாவது செப்.25ந்தேதி மின்சார பணிகள் முடியும் என்றார். அதுபோல 2011ம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் ஒரு இடத்தில் கட்டிட விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுபோல வெளியே வரும் பைப் லைன் சிமெண்ட் உடைபட்டு வெளிப்படையாக பைப் தெரிகிறது. நான்காவது பைப் லலைன் குடிநீருக்கு அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்கம் அஆண்டு மக்கள்தொகை கணக்கு படி 84எம்.எல்.டி அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் பம்பிங் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 30எம்.எல்.டி தண்ணீர் வந்தால் போதுமான அளவாக இருக்கும் என்று ஆய்வின் போது கூறப்பட்டுள்ளது. பம்பிங் நிலையத்தில் அருகில் லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இது மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.  அப்பகுதியிலுள்ள  மண் மேடான பகுதியில் பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.    100 அடி கீழ்புறம் தள்ளி அமைக்கப்பட்டிருந்தால் தண்ணீர் நீரோட்டம் நன்றாக இருக்கும் என்றார்கள். புணிகளை பார்வையிட வந்த மாமன்ற உறுப்பினர்கள் 4 வது பைப் லைன் மூலம் குடிநீர் வர ஆறு மாதங்கள் வரை ஆகும். இதனால் மீண்டும் நாம் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.  

IMG_8949IMG_8933

அதன் பிறகு தற்போது மாநகருக்கு குடிநீர்வந்து கொண்டிருக்கும் வல்லநாடு நீர் ஏற்றும் நிலையத்திற்கு பார்வையிட வந்தார்கள். அங்கிருக்கும் 12 கிணறுகளில் 9 கிணறுகள் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் வல்லநாடு நீர்  நிலையத்திலிருந்து வரும் தண்ணீர் அளவும் தூத்துக்குடி இராஜாஜி பூங்காவிற்கு வரும் தண்ணீர் அளவும் வித்தியாசம் அதிகமாக உள்ளது. கடந்த 22.08.2016 அன்று  முதலாவது குடிநீர் லைனில் 9.04 எம்.எல்.டி 2 வது லைனில் 5.2 எம்.எல்.டி 3 வது லைனில் 19.9 எம்.எல்.டி அன்றைய தினம் மட்டும் 34.25 எம்.எல்.டி தண்ணீர் தூத்துக்குடி இராஜாஜி பூங்கா குடிநீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல 23 ந் தேதி முதலாவது குடிநீர் லைனில் 9.03எம்.எல்.டி 2 வது லைனில் 3.6 எம்.எல்.டி 3 வது லைனில் 19.23 எம்.எல்.டி அன்றைய தினம் மட்டும் 31.86எம்.எல்.டி அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல 24 ந் தேதி முதலாவது குடிநீர் லைனில் 8.6 எம்.எல்.டி 2 வது லைனில் 2.9எம்.எல்.டி  3 வது லைனில் 17.7 எம்.எல்.டி அன்றைய தினம் மட்டும் 29.2  எம்.எல்.டி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  அதுபோல 25 ந் தேதி முதலாவது குடிநீர் லைனில்; 8.83 எம்.எல்.டி 2 வது லைனில் 1.5 எம்.எல்.டி 3 வது லைனில் 18.20எம்.எல்.டி அன்றைய தினம் மட்டும் 28.53 எம்.எல்.டி தண்ணீர், ஆகஸ்டு 26 ந் தேதி முதலாவது குடிநீர் லைனில் 7.07 எம்.எல்.டி, 2 வது லைனில் 3.2 எம்.எல்.டி 3 வது லைனில் 19.02 எம்.எல்.டி  அன்றைய தினம் மட்டும் 29.29 அடன தண்ணீர், அதுபோல 27 ந் தேதி முதலாவது குடிநீர் லைனில் 6.85 எம்.எல்.டி,  2 வது லைனில் 5.0 எம்.எல்.டி, 3 வது லைனில் 21.34 எம்.எல்.டி  அன்றைய தினம் மட்டும் 33.19 எம்.எல்.டி தண்ணீர், . அதுபோல 28 ந் தேதி முதலாவது குடிநீர் லைனில்; 7.90 எம்.எல்.டி 2 வது லைனில் 6.7 எம்.எல்.டி 3 வது லைனில் 22.01 எம்.எல்.டி அன்றைய தினம் மட்டும் 36.6 எம்.எல்.டி தண்ணீர், . 28ந் தேதி வல்லநாடு நீர் ஏற்றும் நிலையத்திலிருந்து 36.6 எம்.எல்.டி தண்ணீர் தூத்துக்குடியிலுள்ள இராஜாஜி பூங்கா குடிநீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இராஜாஜி பூங்கா குடிநீர் கணக்குபடி 22எம்.எல்.டிதான் வந்ததாக கூறப்படுகிறது. வித்தியாசம் 14 எம்.எல்.டி வருகிறது. வித்தியாசம் பற்றி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு 4எம்.எல்.டி  தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்றார். 4எம்.எல்.டி தண்ணீர் கழித்தாலும் தனசரி 8 முதல் 10 எம்.எல்.டி குடி நீர் வித்தியாசம் வருகிறது. இந்த குடி நீர் எங்கே என்று கேட்டால் ஆணையர் பூங்கொடி அருமைக்கண்,  பொறியாளர்  லெட்சுமணன் உதவி ஆணையர் சுப்புலெட்சுமி ஆகியோர் பதில் சொல்ல மறுக்கின்றார்கள். உண்மையில்  18 இடங்களில்  ஏற்பட்ட உடைப்பால் சராசரி 8 எம்.எல்.டி தண்ணீர் வெளியே செல்கிறது.  உடைப்பை சரி செய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக இதே நிலைமை தான் நீடிக்கிறது. தண்ணீர் வரும் பைப் லைன் உடைப்பு என்பதை விட திருட்டுதனமாக குடிநீரை விற்கும்  லாரிகள் மூலம், தண்ணீரை எடுப்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதிகாரிகளை எதிர்த்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் யாரும் பேச முடியாத சூழ்நிலை உள்ளது.

IMG_8873IMG_8977-page-001

IMG_8987

  உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு திமுக சார்பில் வருகிற 6 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று ஆணையர் பூங்கொடி அருமைக்கண்ணிடம் மனு கொடுக்கிறார். மாநகர்  பகுதியில் மாநகராட்சியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் இணைப்பு ஒவ்வொரு வார்டிலும் குறைந்த பட்சம் 20 முதல் 50 இணைப்புகள் திருட்டு தனமாக உள்ளது. பாலவினாயகர் கோவில் தெருவிலுள்ள கனி ரெஸ்டாரண்ட் நான்கு குடிநீர்
இணைப்புகள் உள்ளது. ஆனால் மாநகராட்சி நான்கு இணைப்பிற்கு அனுமதி வழங்கவில்லை. அதுபோல கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவில் இணைந்த மூன்று மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் திருட்டு தனமாக இணைக்கப்பட்டுள்ளது. டூவிபுரம் 3 வது தெருவில் அதிமுகவில் உள்ள ஒருவரின் குடியிருப்பில் அனுமதியில்லாமல் 4 குடிநீர் இணைப்புகள் உளளது. இது ஆணையருக்கு தெரிந்தும் குடிநீர் இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை.  இதுபோல மில்லர்புரம் பகுதியில் புதியதாக குடிநீர் இணைப்பிற்கு வாட்டர் சப்ளை பணியிலிருக்கும் ராமமூர்த்தி, ரூ10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்கிறார். அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்கிறார். ஆனால் மாநகராட்சி ஆணையர் எதையும் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் 2016 உள்ளாட்சி தேர்தலில் குடிநீர் பிரச்சனையால்,  தோல்வியைதான் சந்திக்கும்.

 மக்கள்செய்திமையம் 5.9.2016 காலை 5மணி

Comments

comments