தூத்துக்குடி மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை…ரூ34 கோடி எங்கே?…துப்பரவு தொழிலாளர் போராட்டம்…

தூத்துக்குடி மாநகராட்சி  தற்போது  நிதி பற்றாக்குறையால் சிக்கி தவிக்கிறது. இதனால் துப்பரவு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

   இந்த நிலையில்  மே 9ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் 200க்கு மேற்பட்ட  துப்பரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறது.. இதில்  50க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் மாநகராட்சியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

  துப்பரவு  பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஞானசேகர்,  சுகாதார ஆய்வாளர் கண்ணன்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  பேச்சுவார்த்தையை அதிகாரிகள் எல்லோரும் சென்னையில் உள்ளனர். வருகிற செவ்வாய்கிழமைக்குள் இரண்டு மாத சம்பளம் உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வந்துவிடும் என்று உறுதி அளித்தார்கள்.

   இது பற்றி துப்பரவு பணியாளர்களிடம் கேட்டபொழுது மகளிர் சுயஉதவிக்குழு மூலம் எங்களை தேர்வு செய்தார்கள் . காலை 6மணி முதல் 11மணி வரை பணி செய்ய வேண்டும் என்று கூறி தினசரி சம்பளம் ரூ304  என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடந்த 2மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை கேட்டால் சரியான பதில் இல்லை.

   மேலும், தருவைகுளத்தில் உள்ள உரங்கிடங்குக்கு குப்பைகளை கொண்டு செல்லும் போது அங்குள்ள பணியாளர்கள் மதியம் 2மணி வரை எங்களை வேலை வாங்குகிறார்கள் என்று துப்பரவு பணியாளர்கள் கூறினார்கள். இதுபற்றி மாநகராட்சியில் விசாரித்த பொழுது மாநகராட்சி பணம் சுமார் ரூ34கோடி மாநகராட்சியில் கணக்கில் வரவு வராமல் உள்ளது. இந்த பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. ரூ34கோடி காணாமல் போனது தொடர்பாக ஐந்து பேரிடம் விசாரித்து வருவதாகவும் கூறினார்கள்.

   மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் நான்கு பேர்  ஓய்வு பெற்றார்கள். ஒய்வு பெற்றவர்களுக்கு  வழங்க வேண்டிய பணம் இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது. அதுபோல மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனம் 4, கழிவுநீர் வாகனம் 1 ஆகிய 5 வாகனங்கள் பராமரிப்பு பணிக்காக தனியார் பணிமனையில் உள்ளது. மாநகராட்சியில் இருந்து பராமரிப்புக்கு உரிய தொகையை செலுத்தாத காரணத்தால், வாகனங்களை வெளியே எடுக்கமுடியவில்லை. மேலும் வாகனங்களுக்கு சாலைவரியும் செலுத்தவில்லை.

   மாநகராட்சி நிதிபற்றாக்குறையால்  சிக்கி தவிப்பதால்  பல பணிகள் செய்யமுடியாமல் முடங்கி கிடக்கிறது. மாநகராட்சியிலிருந்து சொத்து வரி,  குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட பல வரிகளை மாநகராட்சி உயர்த்தியும் அடிப்படை வசதிகளை செய்ய முடியாமலும், பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாமலும் மாநகராட்சி உள்ளது.

   மாநகராட்சிக்கு வரவேண்டிய சுமார் ரூ34கோடி  எங்கே போனது என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ34கோடி வேறு வகைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், மறுபுறம் மாநகராட்சிக்கு வந்த பொதுநிதி பணம் என்றும் பல்வேறு வகையில் பேசப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் ஐ.ஏ.எஸ் அவர்கள்  உடனடியாக இது தொடர்பாக விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்கள்  கூறுகின்றார்கள்…

 மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படாத பணம் ரூ34 கோடி என்பதால், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்கள்  கவனத்துக்கொண்டு செல்லாமல், எப்படி இந்த பிரச்சனையில் தீர்வு காணுவார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது..

 

 

Comments

comments