தூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா?

மே 23ம் தேதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வ.உ.சி கல்லூரி வளாகத்தில்  உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று வேட்பாளர்கள் பார்வையிடுவதற்காக  உள்ள அறையில்  வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு பதிவை சரி பார்க்கும் இயந்திரம்(EVM & VVPAT STRONG ROOM ) பாதுகாப்பு பணியில் இருக்கும் அரசு அதிகாரிகளின் பதிவேடு(TURN TUTY REGISTER) குப்பையில் கிடந்தது. குப்பையில் கிடந்த பதிவேட்டை எடுத்து, தூசி தட்டி டேபிளில் வைத்த போதுதான், எவ்வளவு முக்கியமான பதிவேடு குப்பையில் கிடக்கிறதே என்று நாம் அதிர்ச்சி அடைந்தோம்.. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மோசமான செயல்பாட்டிற்கு இதுவே சான்று.. இப்படி ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?

Comments

comments