தூத்துக்குடி மக்களவைத் தொகுதி… வெற்றி மமதையில் கனிமொழி.. பாஜக வேட்பாளர் தமிழிசையா.. அரசக்குமாரா. 70சதவிகித வாக்காளர்களுக்கு பணமா? பரிசுப் பெட்டி புவனேஸ்வரன் எங்கே?

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் கனிமொழியும், அதிமுக கூட்டணியில் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக புவனேஸ்வரனும் களத்தில் உள்ளார்கள்..

  கனிமொழி மூன்று மாதங்களுக்கு முன்பே, தூத்துக்குடி வீடு எடுத்து தங்கி பிரச்சாரத்தை தொடங்கினார். திமுகவில் கீதாஜீவன் கோஷ்டி, அனிதா கிருஷ்ணன் கோஷ்டி என்று இரு அணிகளை பிரிந்து, ஒருவர் மீது ஒருவர் குற்றம்ச்சாட்டிக்கொண்டு இருப்பதால் தேர்தல் பணியில் வேகம் குறைந்துள்ளது. கிருத்துவர்கள், முஸ்லீம்கள் வாக்குகளை பெற கனிமொழி அதிகமாக கவனம் செலுத்துகிறார்.  கனிமொழி வெளியூர் வேட்பாளர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.  கனிமொழி பணத்தை வாரி கொட்டுவதால் வெற்றி பாதையை நோக்கி சென்றாலும் விளாத்திக்குளம், ஒட்டப்பிடராம் தொகுதிகளில் தேர்தல் பணியில் வேகமில்லை.

 அனிதா ராதாகிருஷ்ணன், தலைவரின் குடும்பத்தினருக்கு மட்டும் அசைவு உணவுக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்கிறார்..பாவம்…

 பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு அதிமுகவினர் பணியாற்ற விரும்பவில்லை. முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஒரங்கட்டுப்பட்டுவிட்டார். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கோயில், கோயிலாக சென்று இந்து கட்சிக்கு வாக்களிக்க அறிக்கை கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்..

 பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி ஒரங்கட்டுப்பட்டுவிட்டார். தேர்தல் பொறுப்பாளர் அரசக்குமார் யாரை மதிப்பது இல்லை. அரசக்குமார் செயல்பாடுகளை பார்க்கும் போது வேட்பாளர் தமிழிசையா…அரசக்குமாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. செய்தி தொடர்பாளர் பிரசாத் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்..

 அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தமிழிசை  கனவில் இருக்கிறார்.. தேர்தல் பொறுப்பாளர் தஅரசக்குமார் பாதுகாப்பில் கோடிக்கணக்கில் பணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகத்தில் வாக்காளர்களில்  தமிழிசை, அரசக்குமார் தலைமையில் 60 சதவிகிதம் வாக்காளர்களுக்கு  பணம் கொடுப்பதா.. 70 சதவிகிதம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதா என்று விவாதம் நடந்தது.. ஒவ்வொரு பூத்திலும் 60 சதவிகிதம் வாக்கு தாமரைக்கு விழவில்லை என்றால் பணத்தை நிர்வாகிகள் திருப்பி தர வேண்டும் என்று கூற, அதிமுக நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டு, கூட்டம் பாதியில் முடிந்தது..

   அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் புவனேஸ்வரன், தேர்தல் களத்தில் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவில்பட்டியில் தேர்தல் அலுவலகம் கூட திறக்கவில்லை. 5.4.19ம் தேதிதான் தூத்துக்குடியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. மாணிக்கராஜா தேர்தல் பணியாற்றவில்லை..

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பம்பரமாக பணியாற்றி இருந்தால், கனிமொழி வெற்றி பாதையில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அம்மா முன்னேற்றக் கழகம் வேட்பாளர் புவனேஸ்வரன் எங்கே இருக்கிறார் என்ற கேள்விதான் எழுந்துள்ளது..

  கனிமொழி வெற்றி பெற்றுவிடலாம் என்று மமதையில் பணியாற்றாமல், தேர்தல் பணியை வேகப்படுத்த வேண்டும்..

Comments

comments