தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி

20150908_112848 (2)

 

sdk_rajan_mohan-1

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில்  லே செயலாளராக SDK ராஜன் உள்ளார். இவர் தாதுமணல் அதிபர் வைகுண்டராஜனின் பினாமி ஆவார். பொருளாளராக டி. மோகன் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தற்போது இருவரும் எதிரும் புதிருமாக உள்ளார்கள். இந்தநிலையில் தென்னிந்திய திருச்சபை சட்டத்திருத்தங்களை கொண்டுவந்தது. அந்த சட்ட திருத்தத்தை  ஒப்புதல் பெறவேண்டும். அப்போது ஒரு பிரிவினர் சட்டதிருத்தம் கூடாது என்று எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள். இந்த நிலையில் ஒரு தரப்பினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் O.S.NO.275/2015 வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி 29.08.2015 ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.   அதன்படி வாக்கெடுப்பு அதிகாரியாக வழக்கறிஞர் பாலசேகர் நியமிக்கப்பட்டார். வாக்களிக்க தகுதியானவர்கள் 365 பேர். இதில் 330 பேர் வாக்களித்தனர். இதில் சட்டதிருத்தங்களை செய்யக்கூடாது என்று மோகன் தரப்பைச் சார்ந்த அணியினருக்கு ஆதரவாக 182 பேர் வாக்களித்தார்கள்.  சட்டதிருத்தங்களை செய்யலாம் என்று கூறிய லே செயலாளர்  SDK ராஜன் அணியினருக்கு ஆதரவாக 142 வாக்குகளை மட்டுமே பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் சட்ட திருத்தங்கள் செய்யக்கூடாது என்ற மோகன் தலைமையில் உள்ள அணி வெற்றி பெற்றது.  இதனால் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்தங்களை கொண்டுவர எதிர்ப்பு தான் உருவாகியது.

1220150908_112848 (1)

    இந்த நிலையில் SDK ராஜன் அணியினர் திருமண்டல வழக்கறிஞராக செல்வராஜ் என்பவரை மாடரேட்டர் கமிஷனராக  நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது  என்று பொருளாளர் மோகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி நீதிமன்றத்தில் லே செயலாளர் SDK ராஜன், கமிசனர், தேவராஜ் ஞானசிங் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று ஆஜரானார்கள். ஏற்கனவே திருமண்டலத்தில் பல்வேறு புகார்கள் உருவாகியுள்ளது. திருமண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள VGS பள்ளியில் 2014-15ம் ஆண்டு மாணவியர் சேர்க்கையில் ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் வருவாய் வந்தது. அந்த தொகையை வைத்து பள்ளி அருகில் உள்ள இடத்தைவாங்க ரூ90 லட்சம் கொடுத்து வாங்க ராஜ்மோகன் செல்வின் ஒப்பந்தம் போட்டார்.  இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு மாணவியர் சேர்க்கைக்கு பணம் வசூல்  செய்யப்பட்டது. அதன்படி பார்த்தல் இந்த ஆண்டு ரூ2 கோடியே 16 லட்சம் ரூபாய்  வசூல் ஆகியிருக்க வேண்டும். ஆனால் ராஜன் தரப்பினர்  ரூ1 கோடி வந்ததாக கணக்கு காண்பித்தார்கள். ரூ1 கோடியே 16 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. லே செயலாளர்  SDK ராஜன், தேவராஜ், தலைமை ஆசிரியர் அருள் ஜோதி கிருபா மற்றும் தாளாளர் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மாடரேட்டர் தூத்துக்குடி வந்தபோது டயோசிசன் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்தில் இருந்தும் ஒரு தங்க  நாணயம் வழங்கப்பட்டது. அதன்படி 48பவுன் தங்க நாணயம்வழங்கப்பட்டது.2006ம லே செயலாளாராக இருந்த துரைராஜ் காலகட்டத்தில் செல்வராஜ் திருமண்டல வழக்கறிஞராக இருந்தபொழுது துரைராஜ் மற்றும் அவரது வகையறாக்கள்  ரூ40 லட்சத்து  90 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் DSF துரைராஜ் மற்றும் அவரது வகையறாக்கள் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இன்று நீதிமன்றத்தில் டயோசீசன் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் லே செயலாளர் SDK ராஜன் மற்றும் அவரது வகையறாக்கள் ஆஜராக உத்திரவிட்டிருந்தது. ஆனால் வைகுண்டராஜன் உடன்வந்திருந்தது. புரியாத புதிராகவே உள்ளது. டயோசீசனுக்கும், வைகுண்டராஜனுக்கும் என்ன சம்மந்தம்? யாரை  மிரட்ட? யாருக்காக? வக்காலத்து வாங்க நீதிமன்ற வளாகத்தில் பலமணி  நேரம் அமர்ந்திருந்தது ஏன்?

34sdk_rajan_mohan

   சட்டதிருத்த ரகசிய வாக்கெடுப்பில் அதிகாரத்தில் உள்ள SDK ராஜன் அணியில் ஆசிரியர்கள், குருவானவர்கள் சுமார் 165பேர் உள்ளார்கள். அதுபோல அவர்களுடைய ஆதரவாளர்கள் 50 பேர் இருந்தாலும் சட்டதிருத்த வாக்கெடுப்பில் SDK ராஜன் அணியினர் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் SDK ராஜன் தவறான பாதையில் செல்கிறார் என்ற காரணத்திற்காகவும், , டயோசீசன் விவகாரத்தில் வைகுண்டராஜன் தலையிடுவது விரும்பாத காரணத்தினால் தான் SDK ராஜன் ஆதரவாளர்கள் கூட ரகசிய வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தட்சண மாற  நாடார் சங்கத்தை வைகுண்டராஜன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதுபோல தூத்துக்குடி நாசரேத் டயோசீசனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வைகுண்டராஜன்  முயற்சித்து வருகிறார் என்று SDK ராஜன் ஆதரவாளர்களே புலம்புகிறார்கள்..

மக்கள்செய்திமையம் 8.9.15 மாலை 5மணி

 

Comments

comments