தூத்துக்குடி துப்பாக்கி சூடு- பலியானவர்களுக்கு சம்மன்..விசாரணை ஆணையத்தின் அலட்சியம்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நடந்த 100 வது நாள்  தொடர் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது..

 மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் விசாரணை ஆணையத்திலிருந்து  துப்பாக்கி சூட்டில் பலியானவர்களை ஆஜராகி சம்மன் அனுப்பி உள்ளார்கள்.. 29.8.18ம் தேதி அதாவது இன்று தூத்துக்குடி தெற்கு கடற்கரையில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஆஜராகும்படி கிளாஸ்டன் த/பெ கோயில் பிச்சை, மேட்டுப்பட்டி, திரேஸ்புரம் மற்றும் கந்தையா த/பெ கருப்புசாமி, சிலோன் காலனி, சின்னமணி நகர், தூத்துக்குடி இருவருக்கும் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

 கிளாஸ்டன், கந்தையா இருவருமே துப்பாக்கி சூட்டில் பலியாகிவிட்டார்கள்.. மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளிடம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் விவரங்கள் இருந்தும், இப்படி பலியானவர்களுக்கு சம்மன் அனுப்புவதை பார்க்கும் போது, விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் எழுந்துள்ளது..

 துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, திருமதி நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது..

 கிளாஸ்டன் தரப்பிலிருந்து, விசாரணை ஆணையத்தை அணுகி, பிணத்தை தோண்டி எடுத்து வர வேண்டுமா என்று கேட்டு உள்ளார்கள்.. அதற்கு பிறகாவது சம்மன் அனுப்பியதை சரி பார்த்து, பலியானவர்களுக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து, பலியானவர்களின் உறவினர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டாமா? இதை ஏன் ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் செய்யவில்லை..

 மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகள் சரியில்லை.. பலியானவர்களின் மனநிலையை கூட புரிந்து கொள்ளாமல், பலியானவர்களுக்கு சம்மன் அனுப்பிய கூத்து, இந்தியாவில் எந்த விசாரணை ஆணையத்திலும் நடந்திருக்காது…

    திருமதி நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையத்தின் கனிவான வேண்டுகோள்…

 

 

 

Comments

comments