தூத்துக்குடி கலவரம்..தூத்துக்குடிக்கு லண்டலிருந்து வந்தவர்கள் யார்?                                            

மக்கள்செய்திமையம்.காம் தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு பின்னணியில் வெளிநாட்டிலிருந்து நிதி என்ற செய்தி, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட செய்தி இல்லை. பத்திரிகையாளராக தூத்துக்குடி கலவரத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளியுலகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம்தான்..

ரூ60/- கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் உண்மை வெளியே வர வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையம் விரும்புகிறது.

ஏப்ரல் மாதம் லண்டனிலிருந்து வந்த சிலர் தூத்துக்குடியில்  நகரப்பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் தங்கினார்கள். லண்டனிலிருந்து வந்தவர்கள் யார்..யாரை சந்தித்தார்கள் என்பதை  உளவுப்பிரிவு போலீசார் புலனாய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவில்லை. லண்டனிலிருந்து சிலர் தூத்துக்குடிக்கு வந்தது தொடர்பான செய்தியே உளவுப்பிரிவு போலிசாருக்கு தெரியவில்லை..

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர், லண்டன் சென்ற வந்த நோக்கம் என்ன என்பதை தமிழக காவல்துறை புலனாய்வு செய்ய வேண்டும்…

 தூத்துக்குடி கலவரத்தில் படுகாயமடைந்தவர்களின் படங்களை வெளியிட்டு உள்ளோம்.. இந்த படங்களை பார்க்கும் போது கண்களிலிருந்து நீர் தானாக வருகிறது…

Comments

comments